"வலிமை" படத்தில் இருந்து கசிந்த மாஸான பைக் ஸ்டண்ட் காட்சிகள் - வீடியோவுடன் இதோ


இளம் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் காவல் துறை அதிகாரியாக நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் "பே வியூவ்" நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இவர், ஏற்கனவே ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காலா படத்தில் ரஜினியின் இளவயது கதாளியாக னடிதா பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவதாக சில தகவல்கள் சமூக வலைதங்களில் கசிந்ததுள்ளது. 

இப்படத்தில், தற்போது வரை இரண்டு கட்ட படப்பிடிப்புகள் மட்டுமே முடித்துள்ளது என்றும் மொத்தமாக இதுவரை 65% படப்பிடிப்பு முடித்துள்ளது என்றும் தகவல்கள் வெளியானது. 

சமீபத்தில் கூட இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அஜித்துக்கு விபத்து நடந்த காயங்கள் ஏற்பட்டதாக தகவகள் கசிந்தது. ஆனால் தற்போது இப்படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சிகளை ஒத்திகை பார்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைதங்களில் கசிந்துள்ளது. 

ஆம் இதில் இப்படத்தின் இயக்குனர் ஹெச். வினோத் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.படப்பிடிப்பு நடக்கவே இல்லை, வலிமை படம் அந்தரத்தில் நிற்கிறது என்ற தகவல்கள் சுற்றி வந்த நிலையில் படப்பிடிப்பு தள காட்சிகள் வெளியாகியிருப்பது அஜித் ரசிகர்களுக்கு சற்றே ஆறுதல்.

இந்த தீபாவளி, தல தீபாவளி தான்..!


"வலிமை" படத்தில் இருந்து கசிந்த மாஸான பைக் ஸ்டண்ட் காட்சிகள் - வீடியோவுடன் இதோ "வலிமை" படத்தில் இருந்து கசிந்த மாஸான பைக் ஸ்டண்ட் காட்சிகள் - வீடியோவுடன் இதோ Reviewed by Tamizhakam on March 04, 2020 Rating: 5
Powered by Blogger.