சமுத்திர பிணக்கிடங்கு, சமுத்திர மின்சார வாரியம் - யார்ரா நீங்கலாம்..? - எல்லை மீறும் சமுத்திரகனி ட்ரெண்ட்டிங்..!


கடந்த மே மாதம் இறுதியில் காரணமே இல்லாமல் சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகியவர் நம்ம காண்ட்ராக்டர் நேசமணி. அதாவது, நடிகர் விஜய்யின் பிரெண்ட்ஸ் படத்தில் நம்ம வடிவேலு நடித்த கதாபாத்திரம் தான் நேசமணி.

இவர் தலையில் கிருஷ்ணமூர்த்தி சுத்தியலை போட்டு விடுவார். இதனால், பாதிக்கப்பட்ட நேசமணிக்கு ப்ரே செய்தது தெரிந்த விஷயம் தான். 

இணையத்தில், இரு நண்பர்கள் கமெண்டில் நேசமணி தலையில் கல் விழுந்ததற்காக பிரார்த்தனை செய்து அது வைரலாகி #PrayForNesamani என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. 

அதே போல தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருபவர் சமுத்திரகனி நெட்டிசன்கள் மத்தியில் தற்போது சமுத்திரகனியின் பெயரை மாற்றி மாற்றி மீம்ஸ் கிரியேட் செய்து வெளியிட்டு அதை டிரெண்டாக்கி வருகிறார்கள்.

படங்களில் கருத்து சொல்கிறேன் என்று ஆரம்பித்த சமுத்திர கனியின் சமீப கால திரைப்படங்கள் எல்லாம் அவருடைய தனிப்பட்ட அரசியல் விருப்பு, வெறுப்புகளை ரசிகர்கள் மீது திணிக்கும் செயலாக மாறி விட்டது.

இதனால், சமுத்திரகனி மீது பெரும்பாலான ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். படங்களில் அரசியல் பேசினால் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிப்பார்கள். ஆனால், தான் இருக்கும் கட்சி சார்புடன் பேசி, நான் சொல்வது தான் சரி என்று சமுத்திரகனி செய்யும் அட்டகாசங்கள் எல்லை மீறி சென்று விட்டன.


இதனால், பொதுவான சினிமா ரசிகர்களுக்கான சமுத்திரகனி என்ற நிலையில் இருந்து இறங்கி ஒரு குறிப்பிட்ட அமைப்பை அல்லது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கான சமுத்திரகனியாக தன்னை தானே இறக்கி கொண்டார்.


தன்னுடைய சில படங்களில் மதம் சார்ந்த வெறுப்பு கருத்துக்களை கூட ஓப்பனாக பேசிவிட்டார் சமுத்திரகனி. நடிகர்கள் மதம் சார்ந்த கருத்துகளை சினிமாவில் தவிர்த்து விடுவது நல்லது. அது தான் அவர்களுடைய சினிமா எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். அப்போது தான், அனைத்து தரப்பு ரசிகர்களின் அன்பையும், வரவேற்பையும் பெற முடியும். ஆரம்பத்தில் பொதுவான மற்றும் நல்ல கருத்துகளை கூறிய சமுத்திரகனியை வரவேற்ற அதே ரசிகர்கள் தான் இப்போது தனிப்பட்ட மற்றும் தனது சொந்த விருப்பு, வெறுப்பு கருத்துகளை கூறும் சமுத்திரகனியை வெறுக்கிறார்கள்.


அப்படியென்றால், பிரச்சனை.. ரசிகர்களிடம் இல்லை என்பது உறுதியாகின்றது. இதனை சமுத்திரகனி உணர்ந்து கொள்ளவேண்டும் என்பது பொதுவான சினிமா ரசிகர்களின் கருத்தாக உள்ளது.


இந்நிலையில், சமுத்திரகனியின் மீம்கள் எல்லை மீறி சென்று கொண்டிருகின்றன.சமுத்திர பீச், சமுத்திர பிணக்கிடங்கு, சமுத்திர மின்சார வாரியம் என ஒருசுத்து சுத்திக்கொண்டிருகிறார்கள் மீம் கிரியேட்டர்கள்.சமுத்திர பிணக்கிடங்கு, சமுத்திர மின்சார வாரியம் - யார்ரா நீங்கலாம்..? - எல்லை மீறும் சமுத்திரகனி ட்ரெண்ட்டிங்..! சமுத்திர பிணக்கிடங்கு, சமுத்திர மின்சார வாரியம் - யார்ரா நீங்கலாம்..? - எல்லை மீறும் சமுத்திரகனி ட்ரெண்ட்டிங்..! Reviewed by Tamizhakam on March 31, 2020 Rating: 5
Powered by Blogger.