ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்..! - மாஸ் அப்டேட்..!


இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல், ஜோதிகா மற்றும் கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்த படம் ‛வேட்டையாடு விளையாடு'. 

கடந்த 2006-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பு பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கௌதம் மேனனும், கமலும் ஏற்கனவே முயற்சி செய்தனர். 

ஆனால், சில காரணங்களால் அது அப்போது கைக்கூடவில்லை. இந்நிலையில் அதுகுறித்த பேச்சுவார்த்தை தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் கௌதம் மேனன் தற்போது ஜோஸ்வா எனும் படத்தை அவர் இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தை தொடங்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. 

இதுதொடர்பாக நடிகர் கமலை சந்தித்து கவுதமும், ஐசரி கணேஷும் பேசியிருப்பதாகவும், கமல்ஹாசனும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

--Advertisement--
Share it with your Friends