மது பாட்டிலில் உள்ள "மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு " வாசகத்தை மற்றும் தமிழக அரசு..! - புதிய வாசகம் இது தான்..!


மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்பது அப்படியே ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு உண்மை அல்ல. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அது போல தான் மதுவும். அளவோடு அருந்தி மகிழ்ச்சியாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். 

அதே நேரம், நான் பயங்கர கஷ்டத்துல இருக்கேன், எனக்கு மனசு கஷ்டமா இருக்கு என சாக்கு சொல்லியும், நான் எல்லாம் ஃபுல் பாட்டிலை ராவா அடிச்சுட்டு அசராம நிப்பேன் என பகுமானம் காட்டியும், ஓசியில் கிடைக்கிறது என ஒரு சிலரும் மூக்கு முட்ட குடித்து விட்டு ரோட்டோரம் விழுந்து கிடப்பதையும், சாலையில் தாறு மாறாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்துவதையும் பார்த்து வருகிறோம்.

மேலும், சில போதை ஆசாமிகள் சாலையில் போகும், வரும் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். அதனால், மதுவை ஒழிக்க வேண்டும் என நாடு முழுதும் கோரிக்கைகளும், போராட்டங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. 

இதனால், தமிழக அரசு கணிசமான மதுபான கடைகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டது. மது என்பது ஒரு உணவுப்பொருள் மட்டுமே. அளவோடு எடுத்துக்கொண்டால் ஆரோக்கியம், மகிழ்ச்சி. ஆனால், அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களால் அளவோடு குடித்து விட்டு மகிழ்ச்சியாக இருக்கும் நபர்களுக்கும் சிக்கல் ஏற்படுகின்றது. 

எனவே, மதுவை ஒரு உணவுப்பொருளாக பார்த்து பக்குவப்பட வேண்டும். அதனை போதைப்பொருளாக பார்த்தால் அனைவருக்கும் சிக்கல் என்பது விவரம் அறிந்தவர்கள் கருத்தாக உள்ளது. 

இந்நிலையில், மது பாட்டில்களில் அச்சிடப்படும் "மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு" என்ற வாசகத்தை சற்றே மாற்றி புதிய வாசகம் ஒன்றை பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி இனிமேல், " மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் - மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்" என்ற வாசகம் மது பாட்டில்களில் இடம் பெரும்.


கண்ணாடிய திருப்புனா வண்டி எப்படி ஜீவா ஓடும் என்ற அஜித், கருணாஸ் காமெடி நினைவுக்கு வருகிறதா..? - சரி விடுங்க எதாவது ஒரு மாற்றம் வந்து விடாதா என்ற யோசனையில் முயற்சி எடுத்துள்ள தமிழக அரசை நாமும் பாராட்டுவோம். எதுவுமே பண்ணாம இருக்குறதுக்கு.. ஏதாவது பண்றாங்களே..!

--Advertisement--
Share it with your Friends