இந்த நடிகைக்கு எய்ட்ஸ் உள்ளது - பரபரப்பை கிளப்பிய நடிகை ஸ்ரீ ரெட்டி..!


முன்னணி நடிகர்கள், இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் மீது புகார் கூறி, அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும் நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது துணை நடிகை ஒருவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

சென்னை வேப்பேரியில் உள்ள, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நடிகை ஸ்ரீரெட்டி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அவர் கூறுகையில், தெலுங்கு படத் துணை நடிகை கராத்தே கல்யாணி, நடன இயக்குநர் ராகேஷ் ஆகிய இருவரும், பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும், தன்னை பற்றி கடந்த 2 ஆண்டுகளாக அவதூறாகவும், மிகவும் கீழ்த்தரமாகவும் வதந்தி பரப்பி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதனால், அவர்கள் இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டி, மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

ஸ்ரீ ரெட்டி புகார் கூறிய துணை நடிகை கல்யாணி என்பவர் சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நடிகை ஸ்ரீ ரெட்டியின் புகாரை மறுத்ததுடன் அவரை கொச்சை கொச்சையாக பேசினார். மேலும், ஸ்ரீ ரெட்டி மீது நான் சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய முகநூல் பக்கத்தில் கல்யாணிக்கும், ராகேஷிற்கும் எய்ட்ஸ் இருக்கிறது என்ற ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி விட்டுள்ளார்.

இந்த நடிகைக்கு எய்ட்ஸ் உள்ளது - பரபரப்பை கிளப்பிய நடிகை ஸ்ரீ ரெட்டி..! இந்த நடிகைக்கு எய்ட்ஸ் உள்ளது - பரபரப்பை கிளப்பிய நடிகை ஸ்ரீ ரெட்டி..! Reviewed by Tamizhakam on March 06, 2020 Rating: 5
Powered by Blogger.