முதன் முறையாக முன்னணி இயக்குனரின் படத்தில் கீர்த்தி சுரேஷ் - ஆனால், சோகம் என்னன்னா..?!?


தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படம் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் இவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்த ரஜினி முருகன் படம் மூலம் பிரபலமானார். 

அதைத்தொடர்ந்து அவர் நடித்த ரெமோ வெற்றிப்பெற தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். அதன் பின் அவர் நடிப்பில் வெளியான இரண்டு பாம்பு சட்டை, பைரவா ஆகிய படங்கள் தோல்வியடைய தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். 

அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தார். இந்த படம் தமிழிலும்,தெலுங்கிலும் செம்ம ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் 60 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. 

இப்போது பொசு பொசுவென இருந்த தன் உடம்பை குறைத்து ஸ்லிம்மாக மாறி விட்டார் அம்மணி. இப்போது, ரஜினி, சிவா கூட்டணியில் உருவாகி வரும் "அண்ணாத்த" படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஆனால், சோகம் என்னவென்றால் திரைப்படத்தில் அல்ல விளம்பர படத்தில் நடித்துள்ளார். 


பாரம்பாரிய பட்டுப்புடவை சகிதிமாக தோன்றியுள்ள கீர்த்தி சுரேஷின் அந்த விளம்பர படம் தற்போது சமுக வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஆனால்,கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தாலும் கீர்த்தி சுரேஷ் ஒல்லியாக மாறி விட்டதால் எதோ மிஸ்ஸிங் என்று தோன்றுகின்றது.


--Advertisement--
Share it with your Friends