சாக்கடையா...? - கொம்பு இருக்கா..? - சூரரை போற்று படத்திற்கு தடை..? - புகார் கொடுத்தது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..?


இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தில் அபர்ணா முரளி கதாநாயகியாக நடிக்கிறார். 

இப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிற நிலையில், தற்போது சூரரை போற்று திரைப்படத்தின் மண்ணுருண்ட என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த பாடலில் கீழ் சாதி ஒடம்புக்குள்ள ஓடுறது சாக்டையா..? மேல் சாதி காரனுக்கு கொம்பு இருந்தா காட்டுங்கையா..? என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வரிகளை எந்த வித ஆட்சேபனையும் இல்லாமல் அப்படியே  எடுத்துக்கொள்ளலாம். 

ஆனால், அதனை தொடர்ந்து வரும் ஒரு வரியில் உழைத்து சாப்பிடுபவர்கள் கீழ் சாதி காரர்கள் எனவும், உக்காந்து சாப்பிடுபவர்கள் மேல் சாதியினர் என்றும் சில வரிகள் இடம் பெற்றுள்ளன. இதனை என்ன என்று நினைத்து கொண்டு பாடலை கிறுக்கினார் கே.ஏகாதசி என்று தெரியவில்லை.

உக்காந்து கொண்டு சாப்பிடும் வேலை என எதுவும் உள்ளதா..? என்று பாடலாசிரியர் கே.ஏகாதசி விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். சாதியை ஒழிக்கிறேன் என்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தரம் தாழ்த்தி பேசசினால். அந்த சமூகத்தில் இருக்கும் சாதியை வெறுக்கும் நபர்கள் கூட தங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்கி விட மாட்டர்களா..? இது சரியா..? பிறகு, சாதி சாதி என்று தெரியும் நபர்களுக்கும், உண்மையான சமத்துவத்தை பேசும் நல்ல நபர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடுகிறது அல்லவா..?

சாதி என்பது மனித வரலாற்றின் மிகப்பெரிய தவறு. அதிலிருந்து மீண்டு வர சரியான வழிமுறைகளை செய்யாமல் குறிப்பிட்ட சமூகத்தினரை தாழ்த்தி பேசுவது நிச்சயம் ஒரு நல்ல முடிவை தராது என்பது மட்டும் உண்மை.

இந்நிலையில், கொங்கு வேளாளக்கவுண்டர் பேரவை சார்பில் சூரரை போற்று படத்தை தடை செய்யக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஷாக்கிங்கான விஷயம் என்னவென்றால் நடிகர் சூர்யாவும் புகார் கொடுத்த அதே சமூகத்தை சேர்ந்தவர் என்பது தான்.

ஏற்கனவே, நடிகை ஜோதிகாவை திருமணம் செய்த விவகாரத்தில் சில பல பிரச்சனைகள் நடந்து பிறகு சூர்யாவின் தம்பி கார்த்திக்கு அதே சமூகத்தில் இருந்து ஒரு மருத்துவம் படித்த பெண்ணை திருமணம் செய்து வைத்து சமாதனம் ஆகினார்கள். 


தற்போது மீண்டும் இந்த பாடல் விவகாரத்தால் முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளது.

--Advertisement--
Share it with your Friends