வெளிநாடு சென்று திரும்பிய பிரபல பாடகி-க்கு கொரோனா தொற்று உறுதி - வெளியான வீடியோ - ரசிகர்கள் அதிர்ச்சி..!


கடந்த இரண்டு மாதமாக உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் காரணமாக உலக மக்களின் அன்றாட வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்ட்டுள்ளன. 

இந்த வைரஸ் தாக்கிய நபரை குணமாக்கும் மருந்து இன்னும் கண்டு பிடிக்க்கப்படவில்லை என்பதால் தற்போதைக்கு மக்கள் முன் இருக்கும் ஒரே மருந்து வரும் முன் காத்துக்கொள்வது மட்டும் தான். 

இதனால், உலகம் முழுதும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்களை தற்காத்துக்கொண்டிருக்கிறார்கள். நேற்று பாரத பிரதமர் மோடி அவர்களும் இந்தியர்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருங்கள் இந்த நோய் பரவலை தடுத்தாலே நம்மால் இந்த வைரஸ் தாக்குதலை சமாளித்து விட முடியும் என மக்களுக்கு கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176ஆக அதிகரித்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறும் நிலையில், இந்தியாவில் நான்காவது மரணம் பதிவாகியிருக்கிறது. 

கொரோனா வைரஸ் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக டெல்லி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இதுவரை 15 பேர் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரானில் கோரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி பாடகியாக வலம் வரும் கனிகா கபூரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில் பாடகி கனிகா கபூர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, தற்போது லக்னோவ் KGMU மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். தற்போது இனையத்தளத்தில் அவரை அழைத்து செல்லும் வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

--Advertisement--
Share it with your Friends