என்னது..? - "மாஸ்டர்" படத்தில் இந்த காட்சியை விஜய்-யே இயக்கியுள்ளாரா..? - அடேங்கப்பா..! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.!


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, இளம் நடிகை மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஸ்ரீமன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், நாசர், சாந்தனு உள்ளிட்ட பல பிரபல நடிகர் நடித்துள்ளனர்.  

இதுவரை மூன்று போஸ்டர்களை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி காதலர் தின பரிசாக ‘குட்டி ஸ்டோரி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

தற்போது, படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் வேலைகளை இயக்குனர் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருவதாக கூறுகிறார்கள். மேலும் மாஸ்டர் படத்தை வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், இந்த படத்தில் ஒரு காட்சியை நடிகர் விஜய் இயக்கியுள்ளாராம். ஆம், படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஆடை படத்தின் இயக்குனர் ரத்னகுமார் கௌரவ தோற்றத்தில் தோன்றும் சில நிமிட காட்சிகளை நடிகர் விஜய்யே இயக்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

என்னது..? - "மாஸ்டர்" படத்தில் இந்த காட்சியை விஜய்-யே இயக்கியுள்ளாரா..? - அடேங்கப்பா..! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.! என்னது..? - "மாஸ்டர்" படத்தில் இந்த காட்சியை விஜய்-யே இயக்கியுள்ளாரா..? - அடேங்கப்பா..! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.! Reviewed by Tamizhakam on March 07, 2020 Rating: 5
Powered by Blogger.