"மாஸ்டர்" டீசரில் இந்த வசனம் இடம் பெற்றிருக்கும் - விஜய் இதை செய்வார் - வெளியான மாஸ் அப்டேட்..!


மாஸ்டர் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் இந்த மாதம் முழுக்க படம் குறித்த தகவல்களை படக்குழு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் மாஸ்டர் இந்தப் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். 

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. 

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9-ம் தேதி மாஸ்டர் திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் முதல் போஸ்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வெளியானது.

வரும் 15-ம் தேதி ஞாயிற்றுகிழமை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. அதனை தொடர்ந்து அடுத்த வாரம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. 

இந்த ட்ரெய்லரில் நடிகர் விஜய் மாணவர்களுக்காக போராடி, பழிவாங்கப்பட்டு அதற்காக குமுறி பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன என பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் அவருடைய யு-டியுப் சேனலில் கூறியுள்ளார்.

"மாஸ்டர்" டீசரில் இந்த வசனம் இடம் பெற்றிருக்கும் - விஜய் இதை செய்வார் - வெளியான மாஸ் அப்டேட்..! "மாஸ்டர்" டீசரில் இந்த வசனம் இடம் பெற்றிருக்கும் -  விஜய் இதை செய்வார் - வெளியான மாஸ் அப்டேட்..! Reviewed by Tamizhakam on March 13, 2020 Rating: 5
Powered by Blogger.