இந்த பெண் சிங்கத்தை ஒரு ஆண் சிங்கம்தான்.... - மோசமான போட்டோவை போட்டு இரட்டை அர்த்தத்தில் பேசிய சர்ச்சை நடிகை!


தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவரை சமீபத்தில் கூட விடாமல் வெளுத்து வாங்கிய ஸ்ரீரெட்டி, தற்போது தன்னுடைய முழு கவனத்தையும் தமிழ் படங்களில் நடிப்பதில் செலுத்தி வருகிறார்.

ரெட்டியின் டைரி என்கிற பெயரில் உருவாகும் அவருடைய வாழ்க்கை படம் முடிவடைந்தது, அடுத்ததாக ராகவா லாரன்ஸ் எடுக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கானாவில் வெற்றி பெற்ற YRS காங்கிரஸ் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து கூறி அவருக்கு ஆதரவு தெரித்துள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி. மேலும் தமிழ் நாட்டு அரசியலிலும் ஆர்வம் உள்ளதாக கூறியுள்ளார். 

எனவே, விரைவில் இவர் அரசியல் கட்சி ஒன்றில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடிசர்ச்சையான விஷயங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தையும், அதற்கு அவர் இட்டுள்ள தலைப்பையும் பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விளாசி வருகிறார்கள். 

அதில் அவர் கூறியுள்ளதாவது, "முடி முதல் அடி வரை நான் கவர்ச்சியானவள். என்னுடைய சூட்டால் உன்னை கொன்று விடுவேன். ஆண் சிங்கத்தால் தான் பெண் சிங்கத்தை கையாள முடியும்" என கூறியுள்ளார்.


அதாவது, நான் பெண் சிங்கம் என்றும் என்னை அடக்க ஒரு ஆண் சிங்கத்தால் மட்டுமே முடியும் என கூறியுள்ளார் அம்மணி.

இந்த பெண் சிங்கத்தை ஒரு ஆண் சிங்கம்தான்.... - மோசமான போட்டோவை போட்டு இரட்டை அர்த்தத்தில் பேசிய சர்ச்சை நடிகை! இந்த பெண் சிங்கத்தை ஒரு ஆண் சிங்கம்தான்.... - மோசமான போட்டோவை போட்டு இரட்டை அர்த்தத்தில் பேசிய சர்ச்சை நடிகை! Reviewed by Tamizhakam on March 07, 2020 Rating: 5
Powered by Blogger.