காதல் முறிவுக்கு பின் சிம்புவுடன் நெருக்கமாக இருக்கும் ஹன்ஷிகா - இணையத்தில் கசிந்த புகைப்படம்..!
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ‘மஹா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.‘சின்ன குஷ்பு’ என்று அறிவிக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புடன் தமிழ்த் திரையுலகத்திற்குள் வலம் வந்த நடிகை ஹன்சிகாவுக்கு சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும் படியாக படமே இல்லை.
இவர் கையில் இப்போது இருப்பது இந்த மஹா படம் தான். இந்த படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்பு - ஹன்ஷிகா காதல் முறிவின் காரணமாக அவர்கள் இணைந்து நடித்த வாலு திரைப்படம் ஜவ்வு போல இழுத்து ஒரு வழியாக ரிலீஸ் ஆனது.
இந்நிலையில், இந்த படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை பயன்படுத்திக்கொள்ள படக்குழு தவறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆக வில்லை.
இப்போதைக்கு ரிலீஸ் ஆவதற்க்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இந்நிலையில், சிம்புவும்-ஹன்ஷிகாவும் ரொமான்ஸ் மூடில் இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
காதல் முறிவுக்கு பின் சிம்புவுடன் நெருக்கமாக இருக்கும் ஹன்ஷிகா - இணையத்தில் கசிந்த புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
March 27, 2020
Rating:
