"நானும் தனிமையில் தான் இருக்கிறேன் - ஆனால், இது எனக்கு மிகவும் பிடிக்கும்" - கேத்ரின் தெரேசா வெளியிட்ட புகைப்படம்..!


நடிகை கேத்ரின் தெரசா மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், இவர் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். 

அம்மணிக்கு தமிழை விட தெலுங்கில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். தெலுங்கில் இவருக்கு பட வாய்புகள் அதிகம் வந்து கொண்டிருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அனைவரும் அவர்களை அவர்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சுய ஊரடங்கு உத்தரவு இன்று நடை முறைப்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், நடிகை கேத்ரின் தெரேசா வெளியிட்டபதிவில், "நீங்கள் பாத்துக்கப்பாக இருக்க என்னென்ன செய்ய முடியுமோ..? அதனை செய்து கொண்டிருகிறீர்கள் என நம்புகிறேன். என்னை பொறுத்தவரை, வீட்டிலேயே இருப்பது தான் என்னால் முடிந்த விஷயம். நானும் தனிமையில் தான் இருக்கிறேன். ஆனால், எனக்கு இந்த பிராண்ட் கடிகாரம் மிகவும் பிடிக்கும்.." என ஒரு கை கடிகாரத்திற்கு விளம்பரம் செய்துள்ளார் அம்மணி.

"நானும் தனிமையில் தான் இருக்கிறேன் - ஆனால், இது எனக்கு மிகவும் பிடிக்கும்" - கேத்ரின் தெரேசா வெளியிட்ட புகைப்படம்..! "நானும் தனிமையில் தான் இருக்கிறேன் - ஆனால், இது எனக்கு மிகவும் பிடிக்கும்" - கேத்ரின் தெரேசா வெளியிட்ட புகைப்படம்..! Reviewed by Tamizhakam on March 21, 2020 Rating: 5
Powered by Blogger.