அட..! இந்த ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது பிரஷாந்தா..? - இதுல மட்டும் நடிச்சிருந்தார்னா..!


டாப் ஸ்டார் பிரஷாந்த் 90-களில் கொடி கட்டி பறந்த நடிகர். விஜய், அஜித்தெல்லாம் இவருக்கு பின் தான் என்ற நிலை இருந்தது.அந்த அளவுக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் இவருக்கு இருந்தது.

கோயில் திருவிழாக்களில் இவரது புகைப்படங்கள் விற்பனை படுஜோராக நடந்த காலம் அது. 1990 முதல் 2000 வரை பத்தே ஆண்டுகளில் இவர் நடிப்பில் வெளியான மொத்த படங்கள் மட்டும் 30 ஆகும்.வருடத்திற்கு 3 படங்கள். 

கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு ஆள் பிஸி. ஆனால், யானைக்கும் அடி சருக்கும் என்பது போல இவரது தனிப்பட்ட வாழக்கையில் நடந்த சில பிரச்னைகள் சினிமா வாழ்கையை பாதித்தது.

இதனால், இவரது மார்கெட் கிடுகிடுவென சரிந்தது. 2007 முதல் 2011 வரை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. இதனால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை இழந்தார்.

சமீபத்தில், பிரபல நடிகர் ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் "உன்னை நினைத்து" படத்தில் இருந்து விஜய் விலகிய போது அந்த வாய்ப்பு பிரஷாந்திற்கு தான் சென்றது. ஆனால், அப்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான "தமிழ்" என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தால் கால்ஷீட் பிரச்சனையால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.

இந்தபடத்தில் மட்டும் பிரஷாந்த் நடித்திருந்தால் அவருக்கு ஒரு நல்ல திருப்புமுனை கிடைத்திருந்தாலும் கிடைத்திருக்கும்.

அட..! இந்த ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது பிரஷாந்தா..? - இதுல மட்டும் நடிச்சிருந்தார்னா..! அட..! இந்த ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது பிரஷாந்தா..? - இதுல மட்டும் நடிச்சிருந்தார்னா..! Reviewed by Tamizhakam on March 07, 2020 Rating: 5
Powered by Blogger.