திருமணமான நடிகருடன் தொடர்பில் காவ்யா மாதவன் - நடிகரின் மனைவி கூறிய பகீர் வாக்குமூலம்..!


கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் ஓடும் காரில் வான் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த வழக்கை தோண்ட தோண்ட பூதங்கள் கிளம்பியதையும் அறிந்திருப்பீர்கள். 

பிரபல மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியார், நடிகர் திலீப்புக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்கில் கோர்ட்டில் சாட்சி சொல்லியது பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

மஞ்சுவாரியர் கடந்த வியாழக்கிழமை கொச்சி கோர்ட்டில் 11 வது சாட்சியாக நடிகர் திலீப்புக்கெதிரான வன்கொடுமை வழக்கில் சாட்சி சொல்ல வந்தார். 

அப்போது அவர், திலீப்பால் வன்கொடுமைக்கு ஆளான நடிகை என்னுடைய நீண்ட நாள் தோழி என்றும், அவர் என் கணவர் திலீப்புக்கும் நடிகை காவ்யா மாதவனுக்கு இருக்கும் கள்ள தொடர்பை என்னிடம் தெரிவித்ததால் இப்படி வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் கூறி பரபரப்பு உண்டு பண்னினார். 

மேலும், நான் 2015 இல் திலீப்பை விவாகரத்து செய்ய காரணமே அவருக்கும் காவ்யாவுக்கும் இடையிலான கள்ள உறவு தான். காவ்யாவுடனான உறவு பற்றி வன்கொடுமை செய்யப்பட்ட நடிகை என்னிடம் சொன்னதைப் பற்றி நான் திலீப்பிடம் கேட்டேன். ஆனால், அவர் என்னிடம் நான் காவ்யா மாதவனுடன் தொடர்பில்  இல்லை என்று மறுத்தார் " என்று மஞ்சு கூறினார்.

இந்த வழக்கை சிறப்பு நீதி மன்றம் விசாரித்து வருகின்றது. வழக்கை ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உயர் நீதி மன்றம் உத்தவிட்டுள்ளதை தொடர்ந்து வழக்கில் இருக்கும் 130-க்கும் மேற்பட்ட சாட்சியங்களை தினமும் ஒருவர் என விசாரித்து வருகிறது சிறப்பு நீதி மன்றம்.

இந்நிலையில், மஞ்சு வாரியாரின் இந்த வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகின்றது.

--Advertisement--
Share it with your Friends