மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த "பரவை முனியம்மா" காலமானார் - அதிர்ச்சி தகவல்..!


சியான் விக்ரமின் தூள் படத்தின் " ஏய்..சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா. 

ஏராளமான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்கள் பாடியவர். 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரை சேர்ந்தவர் என்பதால் ‘பரவை முனியம்மா’ என மக்களால் அழைக்கப்படுகிறார். 

தமிழக அரசின் ‘கலைமாமணி‘ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் "ராயபுரம் பீட்டரு.." என்ற பாடலை பாடியதுடன் அந்த பாடலில் நடித்தும் இருந்தார்.

அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. சமீப காலமாக சிறுநீரகக்ககோளாறு உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா இன்று அதிகாலை 2.30 மணிக்கு காலமானார். இது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த "பரவை முனியம்மா" காலமானார் - அதிர்ச்சி தகவல்..! மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த "பரவை முனியம்மா" காலமானார் - அதிர்ச்சி தகவல்..! Reviewed by Tamizhakam on March 28, 2020 Rating: 5
Powered by Blogger.