"மாஸ்டர்" படம் ரிலீஸ் குறித்து வெளியான தகவல் - ரசிகர்கள் அதிர்ச்சி..!


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் "மாஸ்டர்" படத்தின் ரிலீஸ் குறித்த சில தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த இரண்டு மாத அளவில் உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தோற்றை தடுக்க பல்வேறு நாட்டின் அரசாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தவைரஸ்நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் இப்போதைக்கு அரசுகளின் முன்னாள் இருக்கும் ஒரே வழி இந்த நோயின் பரவலை தடுப்பது மட்டும் தான். மருந்து கண்டு பிடித்து விட்டால் சாதரணமாக குணப்படுத்த கூடிய மிகவும் சாதாரண காய்ச்சல் தான் இது.

பொதுவாக உடலில் வலு இல்லாதவர்கள்,வயதானவர்கள் தான் இந்த வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் இறந்து விடுகிறார்கள். ஆனால், இளவயது ஆண்கள், பெண்கள் இதிலிருந்து பூரண குணமடைந்துவிடுகிறார்கள். இன்றைய செய்தி ஊடகங்களை பற்றி சொல்லவா வேணும்.இந்த வைரஸ்-ஐ ஒரு உயிர்கொல்லி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

எதற்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க இது உதவும் என்பதால் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்நிலையில், பொது மக்கள் அதிகம் கூடும் ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் போன்ற இடங்களை தற்காலிகமாக மூடுவதற்கு பல நாட்டு அரசாங்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அதன் படி, இத்தாலி, டென்மார்க், நார்வே, கிரீஸ், போலந், ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் திரையரங்குகள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளன. இது அடுத்த மாதம் இறுதி வரை நீடிக்கும் என கூறுகிறார்கள். மேலும், இந்தியாவில் கூட சில மாநிலங்களில் குறிப்பாக கேரளாவில் இந்த மாதம் இறுதி வரை திரையங்குகள் மூடப்பட்டுள்ளது.

கேராளவில் அதிகப்படியானோர் இந்த வைரலாசல் பாதிக்கப்பட்டுள்ளதால் மேலும் சில வாரங்களுக்கு திரையரங்குகளை மூடியே வைக்க கேரளா அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மாஸ்டர் படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்வது என்பது கஷ்டமான விஷயமாக மாறியுள்ளது. இதனால், படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளது என நம்ப தகுந்த வட்ற்றங்களிடம் இருந்து தகவல்கள் வந்துள்ளன.

இது அதிர்ச்சியான விஷயம் என்றாலும்மக்களின் உடல் நிலை கருத்தில் கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"மாஸ்டர்" படம் ரிலீஸ் குறித்து வெளியான தகவல் - ரசிகர்கள் அதிர்ச்சி..! "மாஸ்டர்" படம் ரிலீஸ் குறித்து வெளியான தகவல் - ரசிகர்கள் அதிர்ச்சி..! Reviewed by Tamizhakam on March 13, 2020 Rating: 5
Powered by Blogger.