"விவாகரத்து ஆன நாள் என் மனதில் இந்த விஷயம் ஓடிக்கொண்டிருந்தது" - முதன் முறையாக திவ்யதர்ஷினி வெளியிட்ட தகவல்.!


சினிமா நடிகைகளுக்கு இணையான பிரபல்யம் உள்ளவர் சின்னத்திரை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. தனது, 15 வயதில் இருந்து மீடியாவில் பணியாற்றிவருகிறார்.ஆரம்பத்தின், "தடயம்" என்ற திகில் தொலைகாட்சி தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன் பிறகு, பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளினியாகஇணைந்தார். இன்று வரை தொகுப்பாளினியாக ஒரே சேனலில் தொடர்கிறார். ஒவ்வொருவரின் வாழ்க்கையில் முக்கிய பகுதியாக இருக்கும் காதல் மற்றும் கல்யாணம் இவர் வாழ்க்கையிலும் நடந்தது. ஆனால், அது விவாகரத்து வரை சென்று விட்டது.

இந்த விவாகரத்துக்கு குறித்து பல காரணங்கள், கிசுகிசுக்கள் இணையத்தில் சுற்றி வரும், நம்முடைய தளத்திலும் அவற்றை பதிவு செய்திருக்கிறோம். ஆயிரம் பிரச்சனை, கிசுகிசு என வந்தாலும் தனிப்பட்ட முறையில் விவாகரத்து என்பது ஒரு மனிதனை மனதளவில் பதிப்படைய செய்யும்.

அது போல தான் திவ்யதர்ஷினியும். இந்நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் தன்னுடைய விவாகரத்து பற்றி பேசிய அவர் கூறியதாவது, ‘வாழ்க்கையில் காதல் இரண்டு பேரிடமும் இருக்க வேண்டும், சூழ்நிலை காரணமாக அது உடையவும் செய்யும். அந்த சமயத்தில் ஒரு சிலர் நம்மை ஆதரிப்பார்கள், சிலர் கீழே தள்ளிடுவாங்க, நாம் தான் அதையெல்லாம் தள்ளி வச்சுட்டு முன்னேற வேண்டும். 

விவாகரத்து ஆன நாள் என் மனதில், எப்படியாவது கோர்ட்டில் இருந்து போகவேண்டும் என்ற எண்ணம் தான் ஓடிக்கொண்டே இருந்தது. அதன் பிறகு இப்போது வரை பேசவில்லை, சந்திக்க கூட இல்லை, ஆனாலும், வாழ்க்கை கடந்து சென்றுக்கொண்டே தான் உள்ளது, கிடைச்ச வாழ்க்கைக்கு கடவுளுக்கு நன்றி’ என கூறியுள்ளார் திவ்யதர்ஷினி.

"விவாகரத்து ஆன நாள் என் மனதில் இந்த விஷயம் ஓடிக்கொண்டிருந்தது" - முதன் முறையாக திவ்யதர்ஷினி வெளியிட்ட தகவல்.! "விவாகரத்து ஆன நாள் என் மனதில் இந்த விஷயம் ஓடிக்கொண்டிருந்தது" - முதன் முறையாக திவ்யதர்ஷினி வெளியிட்ட தகவல்.! Reviewed by Tamizhakam on March 06, 2020 Rating: 5
Powered by Blogger.