"சொல்றது ஒன்னு, எடுக்குறது வேற ஒன்னு" - முன்னணி நடிகரின் படத்திலிருந்து வெளியேறிய திரிஷா..!


தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் 18 வருடங்களாக கதாநாயகியாக கொடிகட்டி பறக்கும் திரிஷா சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்து கொள்ளாததால் விமர்சனத்துக்கு உள்ளானார். 

இதற்கு பதிலளித்த நடிகை திரிஷா பட விழாவில் கலந்து கொள்ளாமல் இருப்பது, படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது போன்ற பழக்கங்கள் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இல்லை. 

வரச்சொன்ன நேரத்துக்கு வந்து படப்பிடிப்பு முடிவது வரை இருப்பது எனது பழக்கம். படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கும் சரியான நேரத்துக்கு வந்து விடுவேன். சமீபத்தில் எதிர்பாராமல் ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிக்கு நேரம் கொடுத்ததால் சில சர்ச்சைகள் வந்தன. இதனை படக்குழுவினர் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன் என கூறியிருந்தார்.

தற்போது, நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் இருந்து வெளியேறியுள்ளார் திரிஷா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் சிரஞ்சீவியின் படத்தில் இருந்து ஏன் திரிஷா வெளியேறினார்..? என்ன காரணம்..? என தெலுங்கு சினிமா வட்டாரத்தினர் பல தகவல்களை கிசுகிசுத்து வந்தனர்.


இந்நிலையில், நடிகை திரிஷாவே இந்த விவகாரம் கறித்து தன்னுடைய விளக்கத்தை கொடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, "சில நேரங்களில் சில விஷயங்கள் நாம் ஆரம்பத்தில் என்ன பேசினோமோ மற்றும் விவாதித்தோமா அதிலருந்து முற்றிலும் மாறுபட்டுவிடும்" எனவும் சில உருவாக்கத்தில் வந்த சில வேறுபாடுகள் காரணமாக நான் சிரஞ்சீவி அவர்களின் படத்திலிருந்து வெளியேறுகிறேன். படகுழுவிற்கு என் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

இதன் மூலம் திரிஷாவிடம் ஒன்றை கூறி சம்மதம் வாங்கி விட்டு படத்தை எடுக்கும் போது வேறு விதமாக எடுத்துள்ளார்கள். இதனால் தான் இந்த படத்தில் இருந்து திரிஷா வெளியேறியுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

"சொல்றது ஒன்னு, எடுக்குறது வேற ஒன்னு" - முன்னணி நடிகரின் படத்திலிருந்து வெளியேறிய திரிஷா..! "சொல்றது ஒன்னு, எடுக்குறது வேற ஒன்னு" - முன்னணி நடிகரின் படத்திலிருந்து வெளியேறிய திரிஷா..! Reviewed by Tamizhakam on March 13, 2020 Rating: 5
Powered by Blogger.