அதிலும் முன்னணி நடிகரை சிக்க வைக்கும் "மாஸ்டர்" ப்ளான்..!


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வருகிற கோடை விடுமுறை ஸ்பெஷலாக ஏப்ரல் 09-ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் "மாஸ்டர்". 

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக நடிகர் விஜய்யை இயக்குவதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. .

கத்தி படத்திற்கு பிறகு அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளார். விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து உள்ளார். சமீபத்தில் மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான "குட்டி ஸ்டோரி" பாடல் எதிர்பார்த்தபடி பெரிய வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் "மாஸ்டர்" படத்தின் வியாபாரமும் படுஜோராக நடந்து முடிந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னரே படத்தின் மொத்த பிசினஸ் செய்து முடித்துவிட்டனர்.

சமீபகாலமாக விஜய்யின் படங்கள் அனைத்தும் அண்டை மாநிலங்களிலும் சுமார் 20 கோடி வரை தொடர்ந்து வசூல் செய்து வருகின்றன. அந்த வகையில் பிகில் படம் கர்நாடகாவில் தமிழ் மொழியில் மட்டும் வெளியாகி சுமார் 20 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. 

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய்யின் "மாஸ்டர்" படம் தமிழ் மட்டுமல்லாமல் கன்னட மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியிட இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

சமீபத்தில், நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் "சூரரைப்போற்று" படமும் கன்னட மொழியில் உருவாக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. 

வியாபார ரீதியாக "மாஸ்டர்" படத்தை கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியிட்டால் இன்னும் நன்றாக கல்லா கட்டலாம் என அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளதாம் படக்குழு. 

மேலும், மாஸ்டர் படத்தின் கன்னட பதிப்பை சூர்யாவின் சூரரை போற்று கன்னட பதிப்புடன் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாம் தயாரிப்பு நிறுவனம்.

அதிலும் முன்னணி நடிகரை சிக்க வைக்கும் "மாஸ்டர்" ப்ளான்..! அதிலும் முன்னணி நடிகரை சிக்க வைக்கும் "மாஸ்டர்" ப்ளான்..! Reviewed by Tamizhakam on March 04, 2020 Rating: 5
Powered by Blogger.