விஜய் தான் எனக்கு ரோல் மாடல் - ஆனால், அஜித்.. - பிரபல சீரியல் நடிகை வித்யா பிரதீப் சொல்வதை கேட்டீங்களா...?
பிரபல தமிழ் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும்’ ‘நாயகி’ சீரியலில் ஆனந்தி என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகை வித்யா பிரதீப்.
இவர் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே பல திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இதனால் இவர் எல்லோருக்கும் பரீட்சியமாக காட்சியளித்தார். இவர் நடிப்புக்கு வருவதற்கு முன்னரே ஒரு மாடல் அழகியாக இருந்துள்ளார்.
இவர் ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘சைவம்’ படத்தில் ஒரு சின்ன கேரக்டர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதையடுத்து தமிழில் ‘பசங்க 2’, ‘மாரி 2’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த "8 தோட்டாக்கள்" என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார் அம்மணி. பொதுவாக பிரபலங்கள் ரசிகர்களுடன் உரையாடுகிறார்கள் என்றாலே விஜய், அஜித் குறித்த கேள்வி இல்லாமல் இருக்காது.
Vijay Sir 😊 https://t.co/I2ITdLEXR6— Vidya Pradeep (@Vidya_Off) March 28, 2020
அந்த வகையில், இவரிடமும் அஜித் விஜய் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விஜய் ரோல் மாடல் எனவும். அஜித் மில்லியன் கணக்கானோருக்கு உத்வேகம் கொடுக்க கூடியவர் எனவும் கூறியுள்ளார்.He is the Inspiration of millions 🤗 https://t.co/GIHGDtrIol— Vidya Pradeep (@Vidya_Off) March 28, 2020
விஜய் தான் எனக்கு ரோல் மாடல் - ஆனால், அஜித்.. - பிரபல சீரியல் நடிகை வித்யா பிரதீப் சொல்வதை கேட்டீங்களா...?
Reviewed by Tamizhakam
on
March 28, 2020
Rating:
