"நான் கம்முனுதான் இருந்தேன் - எஸ்.ஜே.சூர்யா தான் அவரசப்பட்டு விட்டார்" - ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!


சினிமாவில் ஒரு ஹீரோ மற்றும் ஹீரோயின் தொடர்ந்து இரண்டு படங்களில் ஜோடியாக நடித்து விட்டால் போதும், அந்த இருவருக்கு லவ்வு என கிசுகிசு வந்துவிடும். அந்த வகையில், சமீபத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா - நடிகை ப்ரியா பவானி ஷங்கர் காதல் வதந்திகள் பரவியதும், அதற்கு எஸ்.ஜே.சூர்யா முன்வந்து மறுப்பு தெரிவித்த விஷயமும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

எஸ்.ஜே.சூரியா ஒரு பக்கம் மறுப்பு தெரிவிக்க, என்னுடைய காதலர் இவர் தான் என்று தன்னுடைய உண்மையான காதலனை பகிரங்கமாக அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.

இப்போது இந்த காதல் வதந்தி விவகாரத்திற்கு இரு தரப்பினரும் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். இந்நிலையில், நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஒரு பேட்டியில், சினிமாவில் கிசுகிசுக்கள் வருவது சகஜம் தான். அதை அப்படியே சினிமாவாக எடுத்துக் கொண்டால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் அதற்கு பதில் அளித்துவிட்டால் அதுவே பெரிய செய்தியாக மாறிவிடும். அதனால், நான் இது பற்றி கண்டுகொள்ளாமல் கம்முனு தான் இருந்தேன். ஆனால், எஸ் ஜே சூர்யா கொஞ்சமும் யோசிக்காமல் என்னையும் அவரையும் பற்றி வெளிவந்த கிசுகிசுக்களுக்கு நேரடியாக பதில் அளித்ததால் அது தலைப்புச்செய்தி ரேஞ்சுக்கு மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவின் ஆரம்பகட்ட சினிமா வாழ்க்கையில் எப்படி இருந்தாரோ என்பது தெரியவில்லை. ஆனால் தற்போது ஒரு நல்ல நடிகனாகவும் நல்ல மனிதராகவும் தன்னை முன்னிறுத்தி வருகிறார். அவருடைய படங்கள் ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது கூடுதல் தகவல்.

"நான் கம்முனுதான் இருந்தேன் - எஸ்.ஜே.சூர்யா தான் அவரசப்பட்டு விட்டார்" - ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..! "நான் கம்முனுதான் இருந்தேன் - எஸ்.ஜே.சூர்யா தான் அவரசப்பட்டு விட்டார்" - ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..! Reviewed by Tamizhakam on March 04, 2020 Rating: 5
Powered by Blogger.