நஸ்ரியாவின் புருஷனுக்கு லிப்-லாக் கொடுத்த அனுபவம் - வெளிப்படையாக கூறிய நடிகை ரம்யா நம்பீசன்..!


ரம்யா நம்பீசன் தமிழில் பீட்ஸா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். 

மேலும், சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார். 

பிக்பாஸ் புகழ் கவின் நடித்த நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். 

படங்களில் குடும்பப்பாங்கினியாகவே தோன்றும் ரம்யா நம்பீசன் மலையாளத்தில் வெளியான சப்பா குரிஷு படத்தில் நஸ்ரியா கணவர் ஆன பகத் ஃபாசிலோடு லிப் லாக் மற்றும் படுக்கை காட்சியில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார். 

இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது “இதற்கு முன்பு என் வாழ்க்கையில் லிப் லாக் செய்தது கிடையாது. எனது முதல் லிப் லாக் ‘சப்பா குரிஷு’ படத்தில் தான் இருந்தது. காட்சியைப் பற்றி இயக்குனர் என்னிடம் சொன்னபோது, ​​லிப்-லாக் செய்வது எனக்கு இது தெரியாது என்று சொன்னேன். ஆனால், அந்த காட்சி படத்திற்கு தேவை என்பதால் சில திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பார்த்து எப்படி லிப்-லாக் செய்வது என்று கற்று கொண்டேன். ‘கமினா’ படத்தில் இடம் பெற்றிருந்த லிப்-லாக் காட்சிகள் தான் லிப்-லாக் என்றால் என்ன என்று புரிய வைத்தது ” என்று கூறியுள்ளார்.

--Advertisement--
Share it with your Friends