முதன் முறையாக முன்னணி இசையமைப்பாளருடன் கை கோர்க்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்..!


நடன இயக்குனராக காலம் தள்ளி வந்த நடிகர் ராகவா லாரான்ஸ் தற்போது நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என கலக்கி வருகிறார். 

இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. முனி படத்தின் தொடர்ச்சியாக உருவான காஞ்சனாவின் ஒவ்வொரு பாகமும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தன.

தற்போது, காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்கான லக்ஷ்மி பாம் படத்தை இயக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்த படத்திற்கு பிறகு, Five Star கதிரேஷன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் ஜி.விபிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினிமா வரலாற்றில் முதன் முறையாக லாரன்ஸ்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணி அமைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முதன் முறையாக முன்னணி இசையமைப்பாளருடன் கை கோர்க்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்..! முதன் முறையாக முன்னணி இசையமைப்பாளருடன் கை கோர்க்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்..! Reviewed by Tamizhakam on March 12, 2020 Rating: 5
Powered by Blogger.