"மூடிட்டு போடா..." - ரசிகருக்கு நடுவிரலை காட்டி திட்டிய ரித்விகா - அந்த ரசிகர், அப்படி என்ன கேட்டார்-ன்னு பாருங்களேன்..!


இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தின் மூலம் சிறந்த நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ரித்விகா. 

இதற்கு ,முன் பாலா இயக்கத்தில் வெளியான 'பரதேசி' , 'நினைத்தது யாரோ' போன்ற சில படங்களில் நடித்த போதிலும் அதில் ரித்விகாவின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை பெறவில்லை. 

'மெட்ராஸ்' படத்தை தொடர்ந்து, ஒருநாள் கூத்து, கபாலி, இருமுகன் என சிறந்த படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகையாக மாறினார். மேலும் இவர் கடந்த ஆண்டு, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி, மக்களின் மிகப்பெரிய ஆதரவோடு டைட்டில் வின்னர் என்கிற பட்டத்தை பெற்றார். 

எனினும், இவர் நடித்து தற்போது வரை ஒரு படங்கள் கூட வெளியாக வில்லை. இவரின் கைவசம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பட வாய்புகள் இல்லை. இதனால், திரையுலகில் வலுவான இடத்தை பிடிக்க போராடி வருகிறார். 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில், சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுருந்தார்.இதை பார்த்த ரசிகர் ஒருவர் பாவம் பட வாய்ப்பு இல்லாம வெட்டியா இருக்காங்க என்று கமென்ட் அடித்திருந்தார்.


இதனை பார்த்த ரித்விகா என்ன கோபத்தில் இருந்தால் என தெரியவில்லை. அந்த ரசிகருக்கு மூடிகிட்டு போடா என்று ரிப்ளை செய்துள்ளார். இதனை பார்த்து ஷாக் ஆன சக ரசிகர்கள், அவர் அப்படி என்ன சொல்லிவிட்டார் என இப்படி திட்டுறீங்க. நீங்க ஒரு நடிகை, யாரவது தவறாக பேசினால் அவர்களுக்கு இப்படி காட்டமாக பதிலடி கொடுத்தால் வரவேற்கலாம். 


ஆனால், மூடிட்டு போடா என்று ஒருமையில் பேசி நடு விரலை காட்டும் அளவுக்கு அப்படி என்ன அவர் கூறிவிட்டார். எதற்கு இப்படி பதில் கொடுத்து உங்களுடைய தரத்தை நீங்களே குறைத்துக்கொள்கிறீர்கள் என ரித்விகா-வை விளாசி வருகிறார்கள்.

"மூடிட்டு போடா..." - ரசிகருக்கு நடுவிரலை காட்டி திட்டிய ரித்விகா - அந்த ரசிகர், அப்படி என்ன கேட்டார்-ன்னு பாருங்களேன்..! "மூடிட்டு போடா..." - ரசிகருக்கு நடுவிரலை காட்டி திட்டிய ரித்விகா - அந்த ரசிகர், அப்படி என்ன கேட்டார்-ன்னு பாருங்களேன்..! Reviewed by Tamizhakam on March 04, 2020 Rating: 5
Powered by Blogger.