தக்காளி..! - ராம் சரண் பிறந்தநாளுக்கு கிடைத்த கொல மாஸ் கிஃப்ட்.! - Jr.N.T.R குரலில் தெறிக்கும் அறிமுக வீடியோ..!


பாகுபலி படத்தை அடுத்து இயக்குநர் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 19-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது.பெரும் பொருட் செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இத்திரைப்படம் 2021 -ம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது.அல்லுரி சிதாராம ராஜு, கொமரம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து 1920-களில் கதை நடப்பதாக உருவாகும் இந்தப் படத்தில் ராம் சரண் ‘தியாகி அல்லுரி சித்தாராம ராஜு’வாகவும், என்டிஆர் ‘தியாகி கொமரம் பீமாகவும் நடிக்கின்றனர். 

முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, ஒலிவியா மொரிஸ், மற்றும் பலரும் நடித்து வருகின்றனர்.

கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த படத்தின் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒரு பாடல் என இணையத்தில் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது படக்குழு. 

நேற்று, மார்ச் 27 ராம்சரண் பிறந்தநாளை முன்னிட்டு, ஆர்.ஆர்.ஆர் படத்தில் சீதா ராமராஜுவாக நடித்துள்ள ராம்சரணின் அதிரடி இன்ட்ரோ தற்போது வெளியாகி உள்ளது. இது ராம்சரண் பிறந்தநாளுக்கு கிடைத்த மாஸ் கிஃப்ட் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

தக்காளி..! - ராம் சரண் பிறந்தநாளுக்கு கிடைத்த கொல மாஸ் கிஃப்ட்.! - Jr.N.T.R குரலில் தெறிக்கும் அறிமுக வீடியோ..! தக்காளி..! - ராம் சரண் பிறந்தநாளுக்கு கிடைத்த கொல மாஸ் கிஃப்ட்.! - Jr.N.T.R குரலில் தெறிக்கும் அறிமுக வீடியோ..! Reviewed by Tamizhakam on March 27, 2020 Rating: 5
Powered by Blogger.