கிம் ஜாங் உன் பற்றி பலரும் அறியாத 10 சுவாரஸ்யமான விஷயங்கள் - இவர், ஒல்லியாக இருந்தால் எப்படி இருப்பார்..! - ஒரு ஜாலி டூர்.!


யாரு சாமி இவரு எனக்கே பாக்கணும் போல இருக்கு என்பது போல தான் இருந்தது இவரது கடந்த இரண்டு ஆண்டுகால நடவடிக்கைகள். ஒரே தாக்கு அமெரிக்கா இருக்காது என அமெரிக்காவுக்கே மிரட்டல் விட்டதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை பெற்றவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்.

இவரை வைத்து நம்மவர்கள் உருவாக்கிய குபீர் மீம்களை நீங்களும் கடந்து வந்திருப்பீர்கள்.உலகநாடுகள்பலவற்றிலும் ஊடக சுதந்திரம் உள்ளது. ஆனால், சில நாடுகளில் ஊடகங்களே கிடையாது. மீறி, கேமராவை தூக்கிக்கொண்டு சென்றால்... செல்ல வேண்டியது. திரும்பி எல்லாம் வர முடியாது.

அந்த அளவுக்கு உலக மீடியாக்கள் நுழைய முடியாத ஒரு இடம் தான் வட கொரியா. அருகில் இருக்கும் தென் கொரியா ஊடகங்கள் எந்த வித அதிகார பூர்வ அறிவிப்பையும் வட கொரியா குறித்து செய்தி வெளியிடாது. வெளியிடவும் முடியாது. அப்படி கூறுகிறார்கள், இப்படி பேசிக்கொள்கிறார்கள் என்று ஒரு யூகத்தின் அடிப்படையில் தான் செய்தி வெளியாகும்.

ஒரு எடுத்துக்காட்டுக்கு, இந்த நிலையை அப்படியே நம்ம தமிழ் நாட்டில்இருப்பது போல கற்பனை செய்து பாருங்கள். குபீர் என வியர்த்து விடும். நடக்கும், நல்லது, கெட்டது, நியாயம், அநியாயம் என எதையும் வெளியே சொல்ல முடியாது. என்ன தான் கத்தி கதறினாலும் கேட்பதற்கு நாதி இல்லை. ஆம், அது ஒரு அடிமைத்தனமான வாழ்கை.

இப்படி, ஒரு நாட்டை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அதிபர் கிம் ஜாங் பற்றி பலரும் அறிந்திடாத சில விஷயங்களை இங்கே பார்ப்போம்.

#1 : உலகிலேயே குறைவான வயதில் அதிபர் ஆனவர்களின் இவரும் ஒருவர்.

#2 : இவருடைய உண்மையான பிறந்ததேதி யாருக்கும் தெரியாது. வயது 34 முதல் 36 வரை இருக்கும் என அனுமானத்தின் பேரில் தான் சொல்கிறார்கள்.

#3 : கிம் தனது குழந்தை பருவபுகைப்படத்தை இதுவரை எங்கும் பகிர்ந்து கொண்டது கிடையாது.

#4 : இவரது ஹேர்ஸ்டைல் இளவட்டங்கள் பலரையும் கவர்ந்துள்ளது. இது சாதாரணம் மிலிட்டரி ஹேர் கட் தான். ஆனால், வட கொரியாவில் உள்ளவர்களுக்கு கிம்மின் இந்த ஹேர் ஸ்டைலை வைக்க அனுமதி இல்லை. அவரது ஸ்டைலில் ஹேர் கட் செய்தால் கிம் தனது ஸ்டைலில் அவரது ஹெட்டை கட் செய்து விடுவார் (நீங்க நம்பலனாலும் அது தான் நெசம்).

#5 :  கிம் 1998 முதல் 2000-ம் ஆண்டு வரை சுவிசர்லாந்தில் படித்தார். அதனால், சுவிஸ்வாட்ச்களையே அதிகம் விரும்பி அணிகிறார்.

 #6 : இவருக்கு சர்க்கரை வியாதி உள்ளது என கூறுகிறார்கள்.

#7 : கூடைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட கிம், பிரபல அமெரிக்க கருப்பின கூடைப்பந்து ஜாம்பவான் டெல்லின் ரான்மேனின் தீவிர ரசிகர் ஆவார். இவரை கிம், பலமுறை சந்தித்துள்ளார்.


#8 : கடுமையான நடவடிக்கைகள் மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தும் கிம் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் போது சிரித்தபடியே தான் போஸ் கொடுப்பார்.

#9 : குதிரை சவாரி செய்வதில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அதுவும் வெள்ளை நிற குதிரை தான் இவரது பேவரைட்.

#10 : சுவிசர்லாந்தில் படிக்கும் போது தன்னுடைய பெயர் மற்றும் அடையாளங்களை மறைத்து தான் படித்து முடித்துள்ளார். இவருடன் படித்த இவரது நண்பர்கள் கிம் ஜாங் ஒரு சாதரணமானவர்.எப்போதும் ஜாலியாக இருப்பார். விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர். ஆனால், சத்தியமாக ஒரு நாட்டின் வருங்கால அதிபர் என்று எந்த இடத்திலும் அவர் தன்னை அடையாளப்படுத்தி கொண்டதில்லை என்று கூறுகிறார்கள்.


#11 . கிம் ஒரு வேளை தனது உடல் எடையை குறைத்தல் இப்படித்தான் இருப்பார்.கிம் ஜாங் உன் பற்றி பலரும் அறியாத 10 சுவாரஸ்யமான விஷயங்கள் - இவர், ஒல்லியாக இருந்தால் எப்படி இருப்பார்..! - ஒரு ஜாலி டூர்.! கிம் ஜாங் உன் பற்றி பலரும் அறியாத 10 சுவாரஸ்யமான விஷயங்கள் - இவர், ஒல்லியாக இருந்தால் எப்படி இருப்பார்..! - ஒரு ஜாலி டூர்.! Reviewed by Tamizhakam on April 27, 2020 Rating: 5
Powered by Blogger.