13 வயதில் பூவே உனக்காக படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை அஞ்சு அரவிந்த் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..!


நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகவும், தமிழ் சினிமாவில் அடையாளமாகவும் இருக்கிறார். இவரின் திரைப்படங்கள் தமிழ் நாடு தாண்டி கேரளா, கர்நாடகா என இந்திய அளவில் பிரம்மாண்டமாக வெளியாகும்.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் திரைப்படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பிறகு, தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான முதல் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் என்றால் அது கடந்த 1996 ல் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பூவே உனக்காக படம் தான். 

இந்த படத்தில் விஜய் ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தவர் பிரபல மலையாள நடிகை அஞ்சு அரவிந்த். பூவே உனக்காக படத்தில் நடிக்கும் போது இவருக்கு 13 வயது தான். இது தான் இவருக்கு முதல் தமிழ் படம். தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். இவர் கடைசியாக நடித்த தமிழ் படம் 2001-ம் ஆண்டு வெளியான "கண்ணா உன்னை தேடுகிறேன்".

அதன் பிறகு என்ன ஆனது என்றே தெரியவில்லை தமிழ் படங்களில் நடிப்பதே கிடையாது. இப்போதும்,மலையாள படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் உருவாகியுள்ள " பூமியிலே மனோஹர ஸ்வகர்யம்" என்றார்எ படத்தில் நடித்து முடித்துள்ளார். 

லாக் டவுன் முடிந்ததும் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த படியாக "தாதா" என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.


இது மட்டுமில்லாமல், தொலைக்காட்சி நிகழ்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இதோ அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில, 13 வயதில் பூவே உனக்காக படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை அஞ்சு அரவிந்த் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..! 13 வயதில் பூவே உனக்காக படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை அஞ்சு அரவிந்த் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..! Reviewed by Tamizhakam on April 19, 2020 Rating: 5
Powered by Blogger.