கொரோனா நிவாரண நிதியாக நடிகர் விஜய் 1,30,00000 நன்கொடை - எது எதற்கு எவ்வளவு..? - இதோ முழு விபரம்..!


பொதுவாக நாட்டில் பேரிடர்கள் ஏற்படும் போது கோடியாக கோடியாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் சில பல கோடிகளை நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கி வருவது தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகின்றது. 

நடிகர் மட்டும் தான் நிதி கொடுக்கிறார்களா..? என்றால் இல்லை, கோடிகளில் லாபம் அள்ளும் பெரிய நிறுவனம் முதல் லட்சங்களில் லாபம் பெரும் சிறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வரை தங்களால் முடிந்த நன்கொடையை வழங்கி வருகிறார்கள். ஆனால், முன்னணி நட்சத்திரங்கள் இப்படி ஒரு உதவி செய்யும் போது அது பலராலும் கவனிக்கப்படுகிறது. 

நடிகர் விஜய் தற்போது கொரோனா நிதியாக 1 கோடியே 30 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். முறையே, தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம், மத்திய அரசின் நிவாரண நிதிக்கு 25  லட்சம், ஃபெப்சி ஊழியர்கள் நல நிதியாக 25 லட்சம் என ஒரு கோடி ரூபாயும். 

அண்டை மாநில முதல்வர்கள் நிவாரண நிதியாக கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி என நான்கு மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 5 லட்சம் என மொத்தம் 20 லட்சம் ரூபாயும், கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாயும் என மொத்தம் 1 கோடியே 30 லட்சம் ரூபாயை அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.

கொரோனா நிவாரண நிதியாக நடிகர் விஜய் 1,30,00000 நன்கொடை - எது எதற்கு எவ்வளவு..? - இதோ முழு விபரம்..! கொரோனா நிவாரண நிதியாக நடிகர் விஜய் 1,30,00000 நன்கொடை - எது எதற்கு எவ்வளவு..? - இதோ முழு விபரம்..! Reviewed by Tamizhakam on April 22, 2020 Rating: 5
Powered by Blogger.