பிக்பாஸ் சீசன் 4 - இணையத்தில் கசிந்த போட்டியாளர்கள் பட்டியல்.!


தமிழ் பிக்பாஸ் சீசன் 4-ல் பங்கேற்றும் பிரபலங்களின் பட்டியல் இணையத்தில் கசிந்துள்ளது. வருடா வருடம் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்த போட்டியில் , 15 அல்லது 16 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் இந்த வருடத்திற்க்கான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் பட்டியல் இனியத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதில், சமீப காலமாக இணையத்தில்இளசுகளின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகை கிரண் மற்றும் நடிகை ஷாலு ஷம்மு ஆகியோர் கலந்து கொள்வது கிட்ட தட்ட உறுதியாகியுள்ளது.

அதனை தொடர்ந்து, நடிகைகள் பூனம் பாஜ்வா, பிகில் அம்ரிதா ஐயர், நடிகை சுனைனா, நடிகை அதுல்யா ரவி, வித்யுலேகா ராமன், நடிகர் மனோபாலா, காணா காணும் காலங்கள் இர்ஃபான், குக் வித் கோமாளி "புகழ்", நடிகர் சரண் சக்தி, டிக் டாக் புகழ் அக்ஷய் கமல், சஞ்சனா சிங், ரம்யா பாண்டியன், நடிகர் விமல், நடிகர் ராதாரவி. ஆகியோரது பெயர்கள் முன்னிலையில் இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பட்டியலில் யார் இருந்தால் நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என உங்கள் கருத்தை கமெண்டில் கூறுங்கள்.

பிக்பாஸ் சீசன் 4 - இணையத்தில் கசிந்த போட்டியாளர்கள் பட்டியல்.! பிக்பாஸ் சீசன் 4 - இணையத்தில் கசிந்த போட்டியாளர்கள் பட்டியல்.! Reviewed by Tamizhakam on April 20, 2020 Rating: 5
Powered by Blogger.