"நீ ஒரு கி****வ பொண்ணுன்னு பாக்குறேன். இல்லன்னா வீடு புகுந்து..." தொகுப்பாளினி ஜாக்லினுக்கு நேர்ந்த கொடுமை..! - ரசிகர்கள் அதிர்ச்சி..!


தொகுப்பாளினி ஜாக்குலின் 1996 ம் ஆண்டு பிறந்தார் இவர் சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்து தனது தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்து வந்தார். 

பொதுவாக நடிகைகளுக்கு இணையாக தொகுப்பாளினிகளும் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்.அந்த லிஸ்டில் நம்ம ஜாக்குலினும் ரசிகர்களின் கூட்டத்தை பெற்றுக்ள்ளார். 

பொதுவாக தொகுப்பாளினி என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன், நல்ல குரல் வளமை உள்ளவர்கள் தான் தேர்ந்தெடுப்பார்கள் ஆனால் சாதாரன அழகுடன் கிறுகிறு குரலுடன் விஜய் டிவியில் கலக்கி வருபவர் ஜாக்குலின்.

இவருக்கு இருக்கும் திறமையை பார்த்து பல இயக்குனர்கள் வாய்ப்புகளை தந்த வண்ணம் உள்ளனர். தற்போது சினிமாவில் மிகவும் பிஸியாக உள்ள ஜாக்லின் மீண்டும் விஜய்  டிவி சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில், தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒருபதிவு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. அதில் அவர் கூரியுள்ளதாவது, இன்று எனக்கும் என் பக்கத்து வீட்டுக்காரருக்கும் சண்டை. என்னுடைய தெருவில் உள்ள நாய்களுக்காக நான் உணவு வைத்தேன். 

என் வீட்டின் கேட்டின் கேட் முன்பு வைத்தால், என் வீட்டில் உள்ள நாய் அந்த நாய்களை பார்த்து குரைக்கும் என்பதால் பக்கத்து வீட்டுக்காரர் கேட்டிற்கு அருகில் வைத்தேன். இது மிகப்பெரிய தவறு தான். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பும் கேட்டேன். 

ஆனால், சண்டை போடும் போது அவர் ஒரு வார்த்தை என்னை திட்டினார். என் மனது மிகவும் துன்பப்பட்டது. " நீ ஒரு கிருத்துவ பெண் என்று பார்க்கிறேன். இல்லன்னா வீடு புகுந்து சாத்திருவேன் " என்று அவர் திட்டினர். நான் செய்த தவறுக்கு என் மதம் என்ன செய்யும். இந்த நேரத்திலாவது மனித தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்."நீ ஒரு கி****வ பொண்ணுன்னு பாக்குறேன். இல்லன்னா வீடு புகுந்து..." தொகுப்பாளினி ஜாக்லினுக்கு நேர்ந்த கொடுமை..! - ரசிகர்கள் அதிர்ச்சி..! "நீ ஒரு கி****வ பொண்ணுன்னு பாக்குறேன். இல்லன்னா வீடு புகுந்து..." தொகுப்பாளினி ஜாக்லினுக்கு நேர்ந்த கொடுமை..! - ரசிகர்கள் அதிர்ச்சி..! Reviewed by Tamizhakam on April 12, 2020 Rating: 5
Powered by Blogger.