"வலிமை" படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் இதை மறந்து விடுவார்கள் - இயக்குனர் ஹெச்.வினோத் அதிரடி..!


சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச்.வினோத். இதையடுத்து இவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதுவே அவருக்கு அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி வெற்றி கண்ட எச்.வினோத், மீண்டும் அவரை வைத்து வலிமை படத்தை இயக்கி வருகிறார். 

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாகவும் அது அமைந்துள்ளது.வலிமை படம் குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வந்த இயக்குனர் எச்.வினோத், முதன்முறையாக அப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

வலிமை குறித்து அவர் கூறியதாவது, அஜித் நடித்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் மங்காத்தா. பெரும்பாலான அஜித் ரசிகர்களுக்கு பிடித்த படம் மங்காத்தா. பலரும் மங்காத்தா 2 எப்போது வரும் என எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால், வலிமை படம் வெளியான பிறகு அஜித் ரசிகர்கள் மங்காத்தா படத்தை மறந்து விடுவாரகள் என கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

"வலிமை" படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் இதை மறந்து விடுவார்கள் - இயக்குனர் ஹெச்.வினோத் அதிரடி..! "வலிமை" படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் இதை மறந்து விடுவார்கள் - இயக்குனர் ஹெச்.வினோத் அதிரடி..! Reviewed by Tamizhakam on April 02, 2020 Rating: 5
Powered by Blogger.