கொரோனா நிவாரணம் - நடிகர் விஜய்யை கலாய்த்த பிரபல நடிகர் - கடும் கோபத்தில் ரசிகர்கள்..!


உலக மக்களை ஆட்டிப்படைத்து வரும்கொரோனா வைரஸ்-ன் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்குபோடப்பட்டுள்ள நிலையில் இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

இது புரியாமால் சதா சர்வ காலமும் அரசை குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் இணையத்தில் சுற்றிக்கொண்டிருகின்றது. ஆளும் கட்சினர் மீது அவநம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இந்த இக்கட்டான கால கட்டத்திலும் எதிர்மறையாக பேசிக்கொண்டிருக்கும் அப்படியானவர்களால் ஒரு பயனும் இல்லை. 

ஆனால், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் ஆரம்பித்து பள்ளி மாணவர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் என அரசுக்கு தங்களுடைய சேமிப்பில் இருந்து ஒருபகுதியைநிதிஉதவியாக செய்து இந்த பேரிடரை சமாளிப்பதில் தங்களுடைய பங்கை கொடுத்து வருகிறார்கள். 

திருச்சியை சேர்ந்தபள்ளி மாணவி சாதனா என்பவர் தான் உண்டியலில் சேர்ந்துவைத்திருந்த 677 ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்துள்ளார். அந்த மாணவி நான்காம் வகுப்பு தான் படிக்கிறார். இப்படி பள்ளி மாணவர்கள் பலரும் தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.

நடிகர் விஜய் சமீபத்தில் 1 கோடியே 30 லட்சம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்தார். இதனை தொடர்ந்து, பாண்டிச்சேரி முதல்வர் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்ததுடன் சக சினிமா நடிகர்களும் இது போன்று தாரளாமாக உதவி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.


இந்நிலையில், பிரபல காமெடி நடிகர் கருணாகரன், விஜய் போல நிதியுதவி தரவேண்டும் என்றால் விஜய் வாங்கும் அளவுக்கு சம்பளம் எங்களுக்கு வேண்டும் என கிண்டலாக கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கடும் கோபத்தில் அவரை விளாசி வருகிறார்கள். பள்ளி மாணவர்களே 100, 500 என நிதி கொடுக்கும் போது நடிகர்கள் லட்சங்களில் வேண்டாம் 1000, 10,000 என நிதியுதவி செய்து அரசுக்கு உதவலாமே. அப்படி உதவ முடியவில்லை என்றால் உதவி செய்பவர்களையும், உதவி கேட்பவர்களையும் கிண்டல் அடிக்காமல் இருக்கலாமே என்று கூறி வருகிறார்கள்.

கொரோனா நிவாரணம் - நடிகர் விஜய்யை கலாய்த்த பிரபல நடிகர் - கடும் கோபத்தில் ரசிகர்கள்..! கொரோனா நிவாரணம் - நடிகர் விஜய்யை கலாய்த்த பிரபல நடிகர் - கடும் கோபத்தில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 26, 2020 Rating: 5
Powered by Blogger.