கொலமாஸ்..! - மீண்டும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படத்தின் ரீமேக்கில் அஜித்..? - இது மட்டும் நடந்தால்..


நடிகர் அஜித் சமீபத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்தார். இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்க தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்தார். 

இதனை தொடர்ந்து இதே கூட்டணி மீண்டும் வலிமை என்ற படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தின் கதை ஹெச்.வினோத்தின் சொந்த கதை ஆகும். இந்த படம் வெளியானால், மங்காத்தா பார்ட் 2-வை கேட்டுக்கொண்டிருக்கும் அஜித் ரசிகர்கள் இனிமேல் கேட்க மாட்டார்கள் என்று கூறி படத்தின்மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் இயக்குனர் வினோத்.

இந்நிலையில், தற்போதயைஹாட் அப்டேட் என்னவென்றால் பாலிவுட்டில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த "Article 15" என்ற படத்தை தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கி வைத்துள்ளதாகவும். இந்த படத்தில் அஜித்தை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறுகிறார்கள்.


இது மட்டும் நடந்தால் அஜித்தின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒரு படமாக இந்த "Article 15" இருக்கும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. 

கொலமாஸ்..! - மீண்டும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படத்தின் ரீமேக்கில் அஜித்..? - இது மட்டும் நடந்தால்.. கொலமாஸ்..! - மீண்டும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படத்தின் ரீமேக்கில் அஜித்..? - இது மட்டும் நடந்தால்.. Reviewed by Tamizhakam on April 11, 2020 Rating: 5
Powered by Blogger.