"மட்டையாகும் வரை மது, பாக்கெட் காலியாகும் வரை புகை.." - ஊரடங்கை உபயோகமான முறையில் கழிக்கும் நடிகை.!


மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் அந்த நடிகை. பாலிவுட், டோலிவுட் என பல இயக்குனர்களிடம் வம்படியாக வாய்ப்பு கேட்டு சென்ற போதும் பயனில்லை. 

ஒருவழியாக தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகி கலக்கினார். இதனால், தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனருடன் காதல் கொண்டு, அவரையே திருமணமும் செய்துகொண்டார். 

ஆனால் அந்த மண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. திருமணமான சில வருடங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து செய்துவிட்டனர். 

இயக்குனர் இன்னொரு பெரிய இடத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், நடிகையோ மது மற்றும் புகை பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார். மீண்டும் நடிக்க வந்த நடிகைக்கு, அவரது மதுப்பழக்கமே எதிரியாக அமைந்தது. 

ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு தளத்தில் பகல் நேரத்திலேயே கேரவேனுக்குள்ளே மது அருந்தி, புகையை ஊதி ஊதி படத்தின் இயக்குனர்களிடம் வெறுப்பை சம்பாத்தித்து கொண்டார். கேரவேனுக்குள் வந்து சீன் சொல்ல முடியாத அளவுக்கு புகையை ஊதி நாறடித்து வைத்தது தான் இதற்கு காரணம்.

இருந்தாலும் மட்டையாகும் வரை மது, பாக்கெட் காலியாகும் வரை புகை என பித்து பிடித்து போயிருந்த நடிகை மீது கொண்ட அன்பு மற்றும் அக்கறை காரணமாக பல இயக்குனர்கள், உதவி இயக்குனர் , நண்பர்கள் என பலரும் அம்மணிக்கு அட்வைஸ் கொடுத்த போதும் இதில் இருந்து விடுபட முடியாமல் தவித்து வந்தார். 

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகள் முதல் நட்ச்சத்திர ஓட்டல் பார்கள் வரை எல்லாம் முடப்பட்டுவிட்டதால், இதையே வாய்ப்பாக பயன்படுத்தி மதுவில் இருந்து விடுபட முயன்று வருகிறாராம் நடிகை. 

மதுபழகத்தில் இருந்து விடுபட்டு மீண்ட தனது நண்பர்கள் சிலர் உதவியுடன் இதற்காக யோகா உள்ளிட்ட பயிற்சிகளை செய்து வருகிறாராம் அவர். எப்படியாவது, மது பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவார் என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் அம்மணியின் நலம் விரும்பிகள்.

"மட்டையாகும் வரை மது, பாக்கெட் காலியாகும் வரை புகை.." - ஊரடங்கை உபயோகமான முறையில் கழிக்கும் நடிகை.! "மட்டையாகும் வரை மது, பாக்கெட் காலியாகும் வரை புகை.." - ஊரடங்கை உபயோகமான முறையில் கழிக்கும் நடிகை.! Reviewed by Tamizhakam on April 26, 2020 Rating: 5
Powered by Blogger.