"திரும்பி வந்துட்டேன்.." - சமந்தாவால் குஷியான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்..!
சமந்தா சுமார் இரண்டு வாரங்களாக ட்விட்டர் பக்கமே வரவில்லை. இதையடுத்து மறுபடியும் அதே பேச்சு கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருப்பதால் திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் தான் பொழுதை கழிக்கிறார்கள்.
ட்வீட் செய்வது, இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவது, ரசிகர்களுடன் சாட் செய்வது என்று அமர்க்களப்படுத்துகிறார்கள். ஆனால் சாதாரண நாட்களிலேயே ட்விட்டரில் ஓவர் ஆக்டிவாக இருக்கும் சமந்தாவை மட்டும் ஆளேயே காணவில்லை.
சமந்தா ட்விட்டர் பக்கம் வந்து சுமார் 2 வாரங்கள் ஆகிறது. இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு ஒரு வாரம் ஆகிறது. இதையடுத்து சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் அதனால் தான் சமூக வலைதளங்கள் பக்கம் வராமல் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று பேசத் துவங்கிவிட்டார்கள்.
நாட்டுல ஆயிரம் பிரச்சனை போய்க்கொண்டு இருந்தாலும், சமூக வலைதளத்தில் ஆயிரத்தி ஒன்னாவது பிரச்சனையாக ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும். அது போன்ற ஒரு பிரச்சனை தான் இது.
இதனால், கடுப்பான சமந்தா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் சமந்தா, நீண்ட தூக்கத்திலிருந்து திரும்பியிருக்கிறேன். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்று கூறி தன்னை பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
"திரும்பி வந்துட்டேன்.." - சமந்தாவால் குஷியான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
April 24, 2020
Rating:
