இயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா.? அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்?


பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமா தம்பதியருக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற ஒரு மகனும் உள்ளனர். சாந்தனு தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சினிமாவில் அவர் இன்னும் வளரவில்லை என்றாலும் விடாமல் போராடி வருகிறார். 

பாக்யராஜ் மகள் சரண்யா தனது சகோதரர் சாந்தனுக்கு முன்பே சினிமாவில் அறிமுகம் ஆனார். கடந்த, 2006 ஆம் ஆண்டு வெளியான “பாரிஜாதம்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் சரண்யா. அதுவே அவருக்கு கடைசி தமிழ் படமாகவும் அமைந்து விட்டது.மலையாளத்தில் போட்டோகிராஃபர் என்ற படத்தில் நடித்தார்.

அதன் பின் சினிமாவுக்கு முழுக்கு போட்ட சரண்யா, என்ன ஆனார்..? எங்கு போனார்..? என்று யாருக்கும் தெரியவில்லை. பாரிஜாதம் படத்தில் சரண்யாவுக்கு ஜோடியாக நடித்த அந்த திரைப்படத்தின் கதாநாயகன் பிரித்திவிராஜ் உடன் காதல் என அந்த காலகட்டத்தில் கிசு கிசுக்கப்பட்டது. 

ஆனால் அது வெறும் வதந்தி என காலப்போக்கில் தெரிந்தது. பின்னர் ஏன் சினிமாவுக்கு முழுக்கு போட்டார் சரண்யா.  தற்போது, 33 வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்..? என விவரம் தெரிந்தவளிடம் விசாரித்தால் பல திடுக் தகவல்கள் வெளிவந்தன. 

ஆம், அவர் காதலில் விழுந்து ஏமாற்றப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இந்தியர் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார் சரண்யா. ஆனால்,அந்த காதல் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. 

தனது காதல் தோல்வியை தாங்கி கொள்ள முடியாத சரண்யா, வீட்டிலேயே தற்கொலை முயற்சி கூட செய்துள்ளார். பின் காப்பாற்றப்பட்டு உறவினர்கள் நண்பர்கள் ஆலோசனைப்படி மீண்டார். காதல் தோல்வியால், வாழ்க்கையை வெறுத்த சரண்யா, எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாமல், தான் உண்டு தன் வேலை உண்டு, என வாழ்ந்து வருகிறார். சமூக வலைதளங்களில் கூட இவரை பார்க்க முடிவதில்லை.

இதை தாங்கிக் கொள்ள முடியாத இயக்குனர் பாக்யராஜ், தன் மகள் சரண்யாவை அமெரிக்காவிற்கு அனுப்பி மேற்படிப்பு படிக்க வைத்து வருகிறார்.

இயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா.? அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்? இயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா.? அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்? Reviewed by Tamizhakam on April 30, 2020 Rating: 5
Powered by Blogger.