உங்கள் ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள் - பிரபல நடிகருக்கு கேள்வி எழுப்பும் நடிகை கஸ்தூரி..!


தமிழில் அமைதிப்படை, இந்தியன், என பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை கஸ்தூரி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீப காலமாக அரசியல் குறித்து அவ்வப்போது ட்வீட் போட்டு வருகிறார். 

இந்நிலையில், நடிகை கஸ்தூரி குறித்து, அஜித் ரசிகர்கள் என்று சிலர் ட்விட்டரில் மிகவும் ஆபாசமாக கமெண்ட் செய்துள்ளனர். அதன் ஸ்க்ரீன்ஷாட்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரி பதிவிட்டுள்ளார். 

மேலும், தனது ட்வீட்டில், அஜித் சார் எவ்வளவு நாளைக்கு சும்மா இருப்பீங்க? உங்க ரசிகர்கள் இப்படி கேவலமா ஆபாசமா பேசுவதை கண்டிக்க மாட்டீங்களா? என பதிவிட்டுள்ளார். 

மேலும், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை டேக் செய்து, இதனை தடுக்க வழி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார். சுரேஷ் சந்திரா சார் நீங்க, இந்த விஷயத்தை கண்டும் காணாத மாதிரி இருப்பது நல்ல அல்ல.

தமிழ்நாடு போலீஸ், இந்த ஸ்க்ரீன் ஷாட் பதிவுகளை புகாராக அளிக்கிறேன். நீங்களாவது நடவடிக்கை எடுங்க என்றுள்ளார். ஏற்கனவே இந்த நாயின் ஒரு அக்கௌன்ட் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் திருந்தவில்லை. நண்பர்களே உங்களுக்கு இந்த அற்பன் யாரென்று தெரிந்தால் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும் என கஸ்தூரி மனம் நொந்து பதிவிட்டுள்ளார். 

யாரோ ஒரு விஷமி, அஜித்தின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு மோசமான பதிவுகளை செய்தால் உடனே அந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகரை கேள்வி கேட்பதா..? ஒருவேளை, உங்களுடைய புகைப்படத்தை dp-யாக வைத்துக்கொண்டு இப்படி பேசினால் யாரை போய் கேட்பீர்கள் என்று ரசிகர்கள் கஸ்தூரியை விளாசி வருகிறார்கள்.

உங்கள் ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள் - பிரபல நடிகருக்கு கேள்வி எழுப்பும் நடிகை கஸ்தூரி..! உங்கள் ரசிகர்கள் என்னை படுக்க அழைக்கிறார்கள் - பிரபல நடிகருக்கு கேள்வி எழுப்பும் நடிகை கஸ்தூரி..! Reviewed by Tamizhakam on April 13, 2020 Rating: 5
Powered by Blogger.