தன்னுடைய புகைப்ப்டத்தை பார்த்து அதிர்ந்து போன நடிகை - போலீசில் புகார்..! - யார் செய்த வேலை இது..?


இன்றைய இணைய சமூகத்தில் சமூக வலைதளங்களில் நடிகைகளை பின் தொடர்வோர் மிக அதிகம். அவர்களின் புகைப்படங்களும் ரசிகர்களால் அதிகம் பகிரப்படும். அந்த புகைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டால் ட்ரெண்டும் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே. 

அதே வேளையில், அவர்களின் புகைப்படங்களை சிலர் மார்ஃபிங் செய்வது மற்றும் தவறான வேலைகளுக்கு பயன்படுத்தி வருவதை செய்திகள் வாயிலாக நாம் அவ்வப்போது பார்க்கிறோம். 

தற்போது இதுபோன்ற சிக்கலுக்கு ஆளாகியுள்ளார் பாகுபலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அஸ்ரிதா வெமுகாந்தி. இவர் பாகுபலி 2 ம் படத்தில் அனுஷ்காவுக்கு அண்ணியாக நடித்திருப்பார். 

இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் அவரின் புகைப்படத்தை போட்டு டேட்டிங் செய்ய விருப்பமா..? என்று டேட்டிங் தளம் ஒன்று விளம்பர புகைப்படமாக அவரது புகைப்படத்தை பயன்படுத்தியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 


இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அஸ்திரா வெமுகாந்தி, தான் அப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்கவே இல்லை என்றும், தன்னுடை புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி பெயருக்கு களங்கம் விளைவிக்க பார்க்கிறார்கள். இது குறித்து சைபர் கிரைம் போலிசிடம் புகார் அளிக்கவுள்ளேன் அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய புகைப்ப்டத்தை பார்த்து அதிர்ந்து போன நடிகை - போலீசில் புகார்..! - யார் செய்த வேலை இது..? தன்னுடைய புகைப்ப்டத்தை பார்த்து அதிர்ந்து போன நடிகை - போலீசில் புகார்..! - யார் செய்த வேலை இது..? Reviewed by Tamizhakam on April 01, 2020 Rating: 5
Powered by Blogger.