பிரபல சீரியல் நடிகை மர்ம மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி - செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை..!


பிரபல சீரியல் நடிகை சாந்தி என்கின்ற விஸ்வசாந்தி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கு சீரியல்கள் நடிப்பது மற்றும் நிகழ்சிகளை தொகுத்து வழங்குவது உள்ளிட்டவை மூலம் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமான நடிகை சாந்தி ஆந்தியாவில் யெல்லாரெட்டிகுடா பகுதியில் உள்ள என்ஜினீயர்ஸ் காலனியில், ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.

ஆனால், கடந்த சிலதினங்களாக இவரது வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் திறக்கப்படமாலே இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

சாந்தி இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சியான போலீசார் அங்கு ஏதேனும் ஆதாரம்கிடைக்கின்றதா..? என்று தேடி பார்த்தனர். ஆனால், சந்தேகப்படும் படி எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. அவரது செல்போன் மட்டுமே அவருக்கு அருகில் இருந்தது. 

இதனால், அவருடைய செல்போனை மட்டும் வைத்து அவரது இறப்பிர்க்கான காரணத்தை அறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர் போலீசார். மேலும், அவர் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு CCTV Footage-ஐ வைத்து ஏதாவது கண்டுபிடிக்கமுடியுமா என்றும் முயற்சி செய்து வருகிறார்கள்.

உடனடியாக, பிரேத பரிசோதனை அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அறிக்கை வந்த பிறகு தான் என்ன நடந்தது என்ற உண்மை தெரியவரும் என்கிறார்கள். இந்த சம்பவம் ஆந்திர சின்னத்திரை விட்டரங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரபல சீரியல் நடிகை மர்ம மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி - செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை..! பிரபல சீரியல் நடிகை மர்ம மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி - செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை..! Reviewed by Tamizhakam on April 09, 2020 Rating: 5
Powered by Blogger.