" ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சு" - அனுப்பமா பரமேஸ்வரன் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..!
பிரபல நடிகைகளின் டுவிட்டர், முகநூல் பக்கங்களை சிலர் ஹேக் செய்து முடக்கும் விஷமத்தனங்கள் தொடர்ந்து நடக்கிறது. சமீபத்தில் நடிகை குஷ்புவின் டுவிட்டரை ஹேக் செய்தனர்.
இந்த நிலையில் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் முகநூல் பக்கத்தையும் தற்போது முடக்கி உள்ளனர். இவர் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். தமிழில் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார்.
தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. முகநூல் பக்கத்தில் தனது புகைப்படங்கள், நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் சமூக விஷயங்களை அனுபமா அடிக்கடி பகிர்ந்து வந்தார்.
ரசிகர்களுடனும் கலந்துரையாடினார். இந்த நிலையில் அனுபமா முகநூல் பக்கத்தையும் தற்போது ஹேக் செய்து அதில் கவர்ச்சியான பெண்ணின் உடலோடு அவரது தலையை ஒட்டி மார்பிங் செய்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, இது நான் இல்லை. என்னுடைய முகத்தை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர் என்று விளக்கம் கொடுத்தார் அனுப்பாமா. இந்நிலையில், யோகா செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் " ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சு" என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
" ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சு" - அனுப்பமா பரமேஸ்வரன் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..!
Reviewed by Tamizhakam
on
April 17, 2020
Rating:
