"ப்ளீஸ் கொஞ்சம் கருணை காட்டு,," - நடிகை நயன்தாரா வெளியிட்ட புகைப்படம்..! - உருகும் ரசிகர்கள்..!
உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் இந்த தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் உலக நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஒற்றுமை ஒளியை நிரூபிக்கும் விதமாக கடந்த ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணி முதல் சரியாக 9 நிமிடத்திற்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைந்துவிட்டு அகல் விளக்கு அல்லது டார்ச் லைட் மூலம் ஒளியேற்றும் படி பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்திய மக்கள் அனைவரும் ஒரு குட்டிதீபாவளி போல அந்த நேரத்தில் விளக்குகளை ஏற்றி தங்களது ஒற்றுமையை காட்டினார்கள். அதே போல பிரபல சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அதில் நடிகை நயன்தாராவும் தன்னை இணைத்து கொண்டார். அதனை, அவரது காதலன் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, “டியர் கொரோனா கடவுளை வணங்குவதற்காக விளக்கேற்றி வந்த நாங்கள்,
இன்று உனக்காக தீபம் ஏற்றியுள்ளோம். உன்னை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்
எங்களைம் விட்டு போய் விடு, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப விடு. ப்ளீஸ்
கொஞ்சம் கருணை காட்டு” என்று பதிவிட்டுள்ளார்.
"ப்ளீஸ் கொஞ்சம் கருணை காட்டு,," - நடிகை நயன்தாரா வெளியிட்ட புகைப்படம்..! - உருகும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
April 10, 2020
Rating:
