தனுஷின் அந்த படத்தை பார்த்து விட்டு நல்லாவே இல்லைன்னு சொன்னேன்..! - ஆனால்,...? - சிம்பு ஓப்பன் டாக்..!


தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகர்கள் மற்றும் தனக்கென ஒரு ஸ்திரமான ரசிகர் வட்டத்தை வைத்துள்ள நடிகர்களை பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும்.

ஆம், அவர்கள் தங்களுடைய போட்டியாளர் என்று மற்றொரு நடிகரை முன்னால் வைத்திருப்பார்கள். உதாரணதிற்கு, MGR - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித், சிம்பு - தனுஷ் என்பது போல.


தனக்கு நிகரான ஒரு நடிகரை தன்னுடைய போட்டியாளர் என்று மறைமுகமாக பல விஷயங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் பதிய வைத்து விடுவார்கள். அந்த நடிகரும் இந்த நடிகரும் எதிரி என்ற ஒரு மாயபிம்பம் ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருக்கும். இது தான் அவர்களின் வளர்ச்சிக்கும், ஸ்திரமான ரசிகர் வட்டத்துக்கும் காரணம். 

இது போன்ற போட்டியாளரை அடையாளப்படுத்தாத நடிகர்களின் நிலையை பாருங்கள் அவர்களுக்கான ரசிகர் வட்டம் சொல்லிக்கொள்ளும் படி இருக்காது. அந்த காலத்து, ஜெய் சங்கர் முதல் இப்போது இருக்கும் விக்ரம், ஜெயம் ரவி வரை.

என்னது விக்ரமுக்கு ரசிகர்கள் இல்லையான்னு சண்டைக்கு வந்துடாதிங்க பாஸ். விக்ரம் சிறப்பான நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை இருந்தாலும் அவருக்கு ஒரு ஸ்திரமான ரசிகர் வட்டம் இல்லை என்பது நிதர்சனம். இது தான் முன்னணி நடிகர்களின் வெற்றியின் சூட்சுமம்.

அந்த வகையில், நடிகர் சிம்பு மற்றும் தனுஷ் ஆகியோர் பல விஷயங்கள் மூலம்ஒருவருக்கொருவர் போட்டி என்று அடையாளப்படுத்திக்கொண்டு ரசிகர் மனதில் பதிந்து விட்டார்கள்.

இந்நிலையில், நடிகர் சிம்பு ஒரு மேடையில் பேசும் போது, ஆரம்ப காலத்தில் தனுஷ் அவர்களின் துள்ளுவதோ இளமை படத்தை பார்த்து விட்டு இந்த படம் நல்லாவே இல்லன்னு சொல்லியிருக்கேன். ஆனால், இன்று தனுஷ் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்றால் அதர்கு அவருடைய உழைப்பு தான் காரணம் என கூறியுள்ளார்.

தனுஷின் அந்த படத்தை பார்த்து விட்டு நல்லாவே இல்லைன்னு சொன்னேன்..! - ஆனால்,...? - சிம்பு ஓப்பன் டாக்..! தனுஷின் அந்த படத்தை பார்த்து விட்டு நல்லாவே இல்லைன்னு சொன்னேன்..! - ஆனால்,...? - சிம்பு ஓப்பன் டாக்..! Reviewed by Tamizhakam on April 26, 2020 Rating: 5
Powered by Blogger.