"உங்க பையனை நான் மாஸ் ஹீரோவாக்குறேன்.." - முரட்டுதனமான கெட்டப்பில் களமிறங்கும் விஜய்யின் மகன்..!
நடிகர் விஜய்யின் மகன் ஜேஷன் சஞ்சய் ஹீரோவாக களமிறங்குகிறார் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக வலம் வந்துகொண்டிருகின்றன. ஆம், அந்த தகவல் கிடத்தட்ட உண்மைதான்.
நடிகர் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். அடுத்த படத்தில் விஜய்யின் மகனுக்கு வில்லனாக நடிக்கவுள்ளாராம்.
தற்போது, உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு அந்த படத்தின் கதை மிகவும் பிடித்து போய்விடவே அந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லபக்கியுள்ளாராம்.
இந்த படத்தில் நடிகர் விஜய்யின் மகன் ஹீரோவாக அறிமுகமாவர் என்று கூறுகிறார்கள். இந்த படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாகவே நடிக்கிறாராம்.
தெலுங்கில் படம் ஒரு ஸ்டைலில் எடுக்கப்படுகிறது. ஆனால், தமிழில் "பருத்தி வீரன்", "கும்கி" போன்ற முரட்டுதனமான ஸ்டைலில் கிராம பின்னணி, லுங்கியும் பனியனுமாக சுற்றும் கிராமத்தான் போன்று ஹீரோவின் கதாபாத்திரத்தை மாற்றியமைத்து படமாக எடுக்கவுள்ளார்கள் என்று கூறுகிறார்கள்.
இந்த முரட்டுத்தனமான கதாபாத்திரத்திற்காக கணிசமாக உடல் எடை அதிகரிக்கவுள்ளார் விஜயின் மகன் ஜேஷன் சஞ்சய்.
"உங்க பையனை நான் மாஸ் ஹீரோவாக்குறேன்.." - முரட்டுதனமான கெட்டப்பில் களமிறங்கும் விஜய்யின் மகன்..!
Reviewed by Tamizhakam
on
April 23, 2020
Rating:
