படமே இல்லை.. ஆனாலும்... சொத்தை வாங்கி குவிக்கும் கடவுள் நடிகை..! - ஆச்சரியத்தில் சக நடிகைகள்..!


கடவுள் பெயரைகொண்ட அந்த நடிகை கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சொல்லிக்கொள்ளும் படியான படங்களில் நடிக்கவில்லை. அதற்கு முன்பு மட்டும் சொல்லிக்கொள்ளும் படியான படங்களில் நடித்தாரா என்றால் அதுவும் இல்லை. 

ஆனால், சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறார். அவரது பெயரை சொன்னாலே அவரை அறிந்து கொள்ளும் அளவுக்கு பிரபலமாகவும் இருக்கிறார். ஆனால், படங்களில் நடிப்பது என்பது அரிதான விஷயம். 

இந்நிலையில், மும்பை, டெல்லி போன்ற முக்கியமான நகரங்களில் சொத்துக்களை வாங்கி குவிக்கிறாராம் அம்மணி. இது எப்படி..? என சக நடிகைகள் ஆச்சரியத்தில் இருக்கிறார்களாம். 

பட வாய்ப்புக்காக உடல் எடையை தாறுமாறாக குறைத்து இணையத்தில் பிகினி புகைப்படங்களை அடிக்கடி பதிவு செய்து முயற்சி செய்து பார்த்தார் அம்மணி. ஆனால், பட வாய்ப்பு மட்டுமே வரவே இல்லை. 

பாலிவுட் பிரபலங்கள் அதிகம் வசிக்கும் மும்பையின் முக்கியமான பகுதியில் ஒரு சிறு இடம் வாங்குவதே கடினமான விஷயம். ஆனால், இவர் மட்டும் எப்படி அந்த இடத்தில் சொத்துகளை வாங்கி குவிக்கிறார் என வாயை பிளந்து யோசித்து வருகிறார்கள் சக நடிகைகள். தெரிந்தால் நாமும் வாங்கலாமே என்று தான்.

படமே இல்லை.. ஆனாலும்... சொத்தை வாங்கி குவிக்கும் கடவுள் நடிகை..! - ஆச்சரியத்தில் சக நடிகைகள்..! படமே இல்லை.. ஆனாலும்... சொத்தை வாங்கி குவிக்கும் கடவுள் நடிகை..! - ஆச்சரியத்தில் சக நடிகைகள்..! Reviewed by Tamizhakam on April 02, 2020 Rating: 5
Powered by Blogger.