"நிஜமாவே வித்யா பாலனா இது..? நம்பவே முடியல...." - நேர்கொண்ட பார்வை நடிகை வெளியிட்ட வீடியோ.! - ரசிகர்கள் ஆச்சரியம்.!


பிரபல பாலிவுட் நடிகர் வித்யாபாலன். ஒல்லியாக இருந்தால் தான் பாலிவுட்டில் நிலைக்க முடியும் என்பதை உடைத்து காட்டியவர் இவர். பொசு பொசுவென இருக்கும் இவர் சில்க் ஸ்மிதாவின் வாழ்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் பெருவாரியான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தமிஹ்சில், அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார் வித்யா பாலன். 

இந்நிலையில், நேற்று சார்ளி சாப்லினின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை வித்யா பாலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். 

அதில் உலகப்புகழ் பெற்ற காமெடி நடிகர் சார்லி சாப்ளின் போன்று தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார். கடந்த, 5 வருடங்களுக்கு முன்னர் ஒரு மாத இதழுக்காக சார்லி சாப்ளின் தோற்றத்தில் போட்டோஷூட் நடத்தினாராம் வித்யா பாலன்.

அதனை இப்போது வெளியிட்டு சார்ளி சாப்ளினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நிஜமாவே வித்யா பாலனா இது..? நம்பவே முடியல.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"நிஜமாவே வித்யா பாலனா இது..? நம்பவே முடியல...." - நேர்கொண்ட பார்வை நடிகை வெளியிட்ட வீடியோ.! - ரசிகர்கள் ஆச்சரியம்.! "நிஜமாவே வித்யா பாலனா இது..? நம்பவே முடியல...." - நேர்கொண்ட பார்வை நடிகை வெளியிட்ட வீடியோ.! - ரசிகர்கள் ஆச்சரியம்.! Reviewed by Tamizhakam on April 17, 2020 Rating: 5
Powered by Blogger.