ஹலோ.. ஹலோ..நீங்களே ஒரு முடிவுக்கு வரவேண்டாம் - வதந்தி குறித்து இளம் நடிகை அதிரடி பதில்..!


‘ஹவுஸ்ஃபுல் 4′ (ஹிந்தி) படத்துக்கு பிறகு பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘அல வைகுந்தபுரமுலோ’ (தெலுங்கு). இதில் ஹீரோவாக ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். 

இந்த படத்தை இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கியிருந்தார்.இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. 

இந்நிலையில், இதனைத் தொடர்ந்து ‘அருவா’ என்ற தமிழ் படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார் எனவும் சூர்யா கதாநாயகனாக நடிக்கவிருக்கும் இந்த படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகின.

சூர்யா இயக்கத்தில் ஹரி நடிக்கவுள்ளது என்னமோ உண்மை தான். ஆனால், நான் ஹீரோயின் இல்லை என பூஜா ஹெக்டேவே இப்போது கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஹலோ.. ஹலோ.. நான் தமிழ் படங்களில் நடிக்கிறேன் என்று நீங்களே ஒரு முடிவுக்கு வரவேண்டாம். இப்போது வரை நான் எந்த தமிழ் படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை. சில கதைகளை கேட்டுள்ளேன். எல்லாம் நலமாக சென்றால், தமிழ் படங்களில் இந்த வருடம் கண்டிப்பாக நடிப்பேன்." நன்றி என கூறியுள்ளார்.

ஹலோ.. ஹலோ..நீங்களே ஒரு முடிவுக்கு வரவேண்டாம் - வதந்தி குறித்து இளம் நடிகை அதிரடி பதில்..! ஹலோ.. ஹலோ..நீங்களே ஒரு முடிவுக்கு வரவேண்டாம் - வதந்தி குறித்து இளம் நடிகை அதிரடி பதில்..! Reviewed by Tamizhakam on April 01, 2020 Rating: 5
Powered by Blogger.