சந்திரமுகி 2 : ஜோதிகா கதாபாத்திரத்தில் இந்த நடிகையா..? - இதுக்கு படம் எடுக்காமலேயே இருக்கலாம்..! - நெட்டிசன்கள் கருத்து..!


தமிழ் சினிமாவில் கடந்த 2005-ம் ஆண்டு இயக்குனர் P.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் "சந்திரமுகி".

90ஸ் கிட்ஸ்களுக்கு தெரிந்து ஒரே திரையரங்கில் 100 நாள் ஓடிய திரைப்படம் என்றால் அது சந்திரமுகியாக தான் இருக்க முடியும். இணையதளங்கள் வளர்ச்சி பெற்ற பிறகு வெள்ளிகிழமை ரிலீஸ் ஆகும் படங்கள் சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர்ந்து ஓடி விட்டாலே தலை தப்பிச்சது கதை தான்.

அதையும் மீறி, முன்னணி நடிகர்களின் படங்கள், விமர்சன ரீதியாக வரவேற்பை பெரும் படங்கள் தான் வெற்றிப்படங்களாக அமைகின்றன. சமீப காலமாக இளம் இயக்குனர்களின் படையெடுப்பு தமிழ் சினிமா மீது நல்ல நம்பிக்கையை கொடுத்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, ஷங்கர் முதல் சுந்தர் சி வரையிலான பழைய இயக்குனர்கள் கதை பற்றாகுறை காரணமாக எடுத்த படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என காலத்தை ஓட்டும் நிலையில் தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கிறேன் என கிளம்பி விட்டார் இயக்குனர் P.வாசு.

இவரது மகன் ஷக்தி சினிமாவில் அறிமுகமானபோது எந்த வாரிசு நடிகருக்கும் இல்லாத கிரேஸ் இருந்தது. ஆனால், அடுத்தடுத்த படங்கள் ப்ளாப் ஆகி மண்ணை கவ்வின. கடைசியாக அவர் நடித்த "7 நாட்கள்" என்ற படத்தை வாங்க ஒரு தியேட்டர் உரிமையாளரும் முன் வரவில்லை.

மூன்றாம் தர திரையரங்குகள் கூட இந்த படத்தை வாங்க முன்வரவில்லை. P.வாசுவின் முகத்திற்காக ஒரு ஷோ வேண்டுமானால் போடுகிறோம் என சில திரையரங்குகள் முன் வந்தன.

அதனை தொடர்ந்து, பிக்பாஸ், குடித்து விட்டு கார் ஓட்டி பொதுமக்களிடம் சிக்கி தன்னுடைய இமேஜை சின்னாபின்னமாக்கி கொண்டார் ஷக்தி. இவரும், சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க வுள்ளார் என்று கூறுகிறார்கள்.

ஆனால் ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸ் வேட்டையன் வேடத்தில் நடிக்கிறார். மேலும் சந்திரமுகியாக ஜோதிகா நடிக்கலாம் என கூறப்பட்டது மேலும் அவரை இரட்டை வேடத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

பொன் மகள் வந்தாள் படத்தின் பிரமோஷனுக்காக ஜோதிகா அளித்த பேட்டி ஒன்றில் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. தன்னுடைய கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என கூறினார்.

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கலாம் என கூறப்படுகிறது.சந்திரமுகி படத்தில் சிம்ரன் தான் கமிட் ஆகி நடித்தார். ஆனால் அவர் அந்த சமயத்தில் கர்ப்பம் ஆகி விட்டதால் இந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டார்.

அதன் பின்னர்தான் இந்த வாய்ப்பு ஜோதிகாவிற்கு கிடைத்தது. எனவே சந்திரமுகி 2 படத்தில் சிம்ரன் நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள். இதனை அறிந்த ரசிகர்கள், இதற்கு படத்தை எடுக்கமலேயே இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.

சந்திரமுகி 2 : ஜோதிகா கதாபாத்திரத்தில் இந்த நடிகையா..? - இதுக்கு படம் எடுக்காமலேயே இருக்கலாம்..! - நெட்டிசன்கள் கருத்து..! சந்திரமுகி 2 : ஜோதிகா கதாபாத்திரத்தில் இந்த நடிகையா..? - இதுக்கு படம் எடுக்காமலேயே இருக்கலாம்..! - நெட்டிசன்கள் கருத்து..! Reviewed by Tamizhakam on May 28, 2020 Rating: 5
Powered by Blogger.