சச்சின் மகள் வெளியிட்ட ஒரே போட்டோ - வாயை பிளந்த ரசிகர்கள்.! - 24 மணி நேரத்தில் இரட்டிப்பான இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை..!



இந்திய கிரிக்கெட் உலகின் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் என இரண்டு குழந்தைகள். மூத்தவர் சாரா அடுத்து மகன் அர்ஜூன். இவர்களில் அர்ஜூன் தனது தந்தை வழியில் கிரிக்கெட் வீரராக வளர்ந்து வருகிறார். மீடியாவின் வெளிச்சம் தன் மகன் மீது படாமல் பார்த்துக்கொள்கிறார் சச்சின்.


மூத்த பெண்ணான சாரா குறித்து சமீபகாலமாக செய்திகள் வேகம் பிடித்துள்ளன. ஏற்கனவே சாரா மீது பாலிவுட் இயக்குனர்களின் கண்கள் பாய்ந்தபடியே இருந்தன. மிகவும் அழகாக மட்டுமல்ல, புத்திசாலியாகவும் இருப்பவர் சாரா என்று புகழ் வட்டத்தில் இருந்து வந்தார்.

தற்போது, அவரை நடிகையாக்க முயற்சிகள் நடந்து வருகின்றனவாம். ஆனால் கடந்த சில நாட்களாக சாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

இவரை இன்ஸ்டாகிராம் பின் தொடர்வோரின் எண்ணிகையும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. விளையாட்டு உலகிலிருந்து திரையுலகுக்கு வாரிசுகள் வருவது புதிதல்ல.

ஏற்கனவே பேட்மிண்டன் ஜாம்பவான் பிரகாஷ் படுகோனேவின் மகள் தீபிகா படுகோனே இந்தித் திரையுலகில் ராணியாக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


சாரா டெண்டுல்கர் இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் சச்சின் மகளா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.



சச்சின் மகள் வெளியிட்ட ஒரே போட்டோ - வாயை பிளந்த ரசிகர்கள்.! - 24 மணி நேரத்தில் இரட்டிப்பான இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை..! சச்சின் மகள் வெளியிட்ட ஒரே போட்டோ - வாயை பிளந்த ரசிகர்கள்.! - 24 மணி நேரத்தில் இரட்டிப்பான இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை..! Reviewed by Tamizhakam on May 30, 2020 Rating: 5
Powered by Blogger.