பெரிய இயக்குனரிடம் கூறிய "ஒரு வார்த்தை" - 3 வருடம் பட வாய்ப்பு இல்லை..! - ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை..!


தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கவர்ச்சி வேடமாக இருந்தாலும் சரி, கதையையே தாங்கி நிற்கும் தில்லான வேடமாக இருந்தாலும் சரி ஒரு கை பார்த்து விடுகிறார்.

நடித்தால் ஹீரோயின் என்று அடம் பிடிக்காமல் அக்கா, தங்கை போன்ற வேடங்களில் கூட நடிக்கிறார். சமீபத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

இந்நிலையில், ஆரம்ப காலத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடிய போது திரையுலகில் சிலரது பாலியல் ரீதியிலான சீண்டலுக்கு உள்ளானதாகவும், தன்னுடைய நிறத்தாலும், தோற்றத்தாலும் பல முறை கிண்டலுக்கும் கேலிகளுக்கும் உள்ளானதாகவும் கூறி ரசிகர்களை அதிர வைத்துள்ளார்
ஐஸ்வர்யா ராஜேஷ்.


தற்போது சினிமா நடிகையாக வலம் வந்தாலும் ஒரு காலத்தில் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிள் நடனமாடி வந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். ரம்மி, பன்னையாரும் பத்மினியும், தர்மதுரை, காக்கா முட்டை, வட சென்னை போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை பதித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

இதில், காக்கா முட்டை திரைப்படம் இவரது நடிப்பு திறமையை நிருபிக்கும் வகையில் இருந்தது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த போது, குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருந்து தமிழ் சினிமாவில் முன்னிலை பெற, தான் பட்ட பல கஷ்டங்களை பகிர்ந்து கொண்டார். 

அதில் பேசிய அவர், தன்னுடைய நிறம், தோற்றத்தின் காரணமாக, சினிமாவில் பலமுறை கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் உள்ளாகியதாக குறிப்பிட்டார். அதே நேரத்தில் மற்ற நடிகைகளை போல, பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டாலும் அவற்றை எப்படி கையாள்வது என்பது தனக்கு தெரியும் எனவும், நடிகைகள் தைரியமாக வெளியில் வர வேண்டும், எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். 

கதாநாயகியாகும் தகுதி தனக்கு இல்லை எனவும், வேறு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் பல முன்னணி இயக்குனர்கள் கூட கிண்டல் செய்துள்ளனர் என ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவில் தான் கடந்து வந்த பாதையை வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். 

தொடர்ந்து பேசிய அவர், ஆரம்ப காலத்தில் பிரபல காமெடி நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்கும் படி கேட்டார்கள். ஆனால், அந்த ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு வேலையே இல்லை என்பதால் நடிக்க முடியாது என ஒரே வார்த்தையில் கூறி விட்டேன். அதனால், மூன்று ஆண்டுகள் சினிமாவில் ஓரங்கட்டப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

பெரிய இயக்குனரிடம் கூறிய "ஒரு வார்த்தை" - 3 வருடம் பட வாய்ப்பு இல்லை..! - ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை..!  பெரிய இயக்குனரிடம் கூறிய "ஒரு வார்த்தை" - 3 வருடம் பட வாய்ப்பு இல்லை..! - ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை..! Reviewed by Tamizhakam on May 24, 2020 Rating: 5
Powered by Blogger.